`நாக பஞ்சமி!’ - ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்
நாக பஞ்சமி என்பது இந்து வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும்.
நாக பஞ்சமி என்பது இந்து வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்த தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள்.
ஒரு பெண் பாம்பினால் இறந்த தன் அண்ணன்களை இறை அருளாலால் உயிர் பெற வைத்த நாள் என்பதால் இந்நாளில் பூசை செய்தால், கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ALSO READ | அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் அருள் வழங்கும் ஆடிப்பூரம்!
ஒரு கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய ஏழு அண்ணன்மார்களுடன் வசித்துவந்தாள். வயல் வேலை செய்யும் அவர்களுக்கு உணவு எடுத்து செல்லுதல் இவள் வழக்கம். அவ்வாறு செல்லும் போது ,ஒரு நாள் கருடனொன்று பாம்பினை கால்களால் பிடித்து தூக்கிக் கொண்டு போனது. அந்த கழுகு பாம்பினை இறுகப்பிடித்திருந்ததால், அதிக வலியில் பாம்பு விசத்தினைக் கக்கியது. அவ்விசம் தங்கை எடுத்துச் செல்லும் உணவுப் பொருளில் விழுந்தது. அதை உண்ட ஏழு அண்ணன்மார்களும் இறந்தார்கள். அவள் அப்பா அம்மா என்று அழைத்ததும், அங்கு வந்த சிவபெருமான் பார்வதி தம்பதியினர், நடந்ததை விளக்கி நாகப் பஞ்சமி விருதத்தினை இருக்கும்படி கோரினார்கள். அந்தப் பெண்ணும் விரதமிருந்து ஏழு அண்ணன்களையும் உயிர்பிக்க காரணமாக இருந்தாள்.
நாகபஞ்சமி கதை
ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நாககுமார காவியம் என்பதை நாக பஞ்சமி கதை என்று அழைக்கின்றனர். இந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூல் ஐந்து சருக்கங்களையும், 170 பாடல்களையும் கொண்டதாகும்.
வழிபாடு
இந்நாளில் விடியற்காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, நீர் நிலைகளின் கரையோரங்களிலோ, ஆலய வளாகங்களிலோ, உள்ள கல் நாகர் திருமேனிகள் அல்லது புற்றுகளிலும் பசும்பாலால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பூ சாற்றி, தூப தீபாராதனை செய்து வழிபடுவர். வெல்லம் சேர்த்த எள்ளுப் பொடி, அரிசி மாவு, முளைகட்டிய பச்சைப் பயிறு, காய்ச்சாத பசும் பாலுடன் நாவற் கனிகளும் நிவேதிப்பது சிறப்பு. அருகு மற்றும் நாகலிங்கப் பூ, தாழைமடல், மல்லிகை முதலான மலர்கள் கொண்டு பூஜிப்பது விசேஷம்.
இல்லத்தில் வாயிற் நிலைப் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு, மலர்கள் தூவி வணங்கிவிட்டு பின் உள்ளே புக வேண்டும் என்பது ஐதிகம். சர்ப்ப உருவங்களை மஞ்சள் கொண்டு நிலைக்கதவினில் வரைந்து குங்குமத் திலகம் இடுதலும், இயன்றவர்கள் வீட்டினுள் தூய்மையான இடத்தில் கோலமிட்டு, அலங்கரித்த மனையில் பொன், வெள்ளி, தாமிரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட நாகர் வடிவம் நாகப்ரதிமையை தக்க ஆசனத்தில் அமர்த்தி பூஜிப்பதும் வழக்கம்.
ALSO READ | கோயில்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் தமிழக அரசு
நாக் பஞ்சமி நேரம்:
நாக பஞ்சமி பூஜை முகூர்த்தம் - காலை 05:24 முதல் 08:19 AM வரை
காலம் - 02 மணி 55 நிமிடங்கள்
பஞ்சமி திதி - ஜூலை 24, 2020 அன்று 06:04 பிற்பகல் தொடங்குகிறது
பஞ்சமி திதி - ஜூலை 25, 2020 அன்று மாலை 03:32 மணி முடிவடைகிறது