தங்கும் விடுதியில் உடலுறவின் போது மூச்சு திணறி உயிரிழந்த ஆண்; ஹையோ நடக்கவேண்டியது முழுசா நடக்கவில்லையே என்ற வருத்ததில் பெண்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் (Maharashtra) நாக்பூரில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிறு இறுகி மூச்சுத் திணறல் காரணமாக ஆண் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை இரவு நகரின் கபர்கேரா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இறந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக நேரம் செலவிட வியாழக்கிழமை இரவு லாட்ஜுக்கு வந்தனர்.


ALSO READ | நீங்கள் PhonePe பயனரா?.. அப்போ உங்களுக்கு வெறும்149-க்கு காப்பீடு சலுகை கிடைக்கும்!


உடலுறவின் போது உற்சாகத்தை அதிகரிப்பதற்காக அந்தப் பெண் ஆணின் கைகளையும் கால்களையும் நைலான் கயிற்றால் (Nylon rope) நாற்காலியில் கட்டி, அந்தப் பெண் உற்சாகத்தைத் தூண்டுவதற்காக கழுத்தில் மற்றொரு கயிற்றையும் கட்டியுள்ளார்.


மூச்சுத் திணறல் காரணமாக ஆண் உயிரிழப்பு 


அவர், "இதற்குப் பிறகு, அந்த பெண் கழிப்பறைக்குச் சென்றார், பின்னர் அவர் ஆணுடன் கட்டப்பட்டிருந்த நாற்காலியை நழுவவிட்டு, கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை இறுக்கிக் கொண்டார், அந்த பெண் வெளியே வந்தபோது ஆணில் எந்த அசைவும் இல்லை என்பதைக் கண்டார்". அந்தப் பெண் உடனடியாக உதவி கோரினார். லாட்ஜ் தொழிலாளி வந்து நாற்காலியில் (Chair) கட்டப்பட்ட நபரை கயிற்றால் விடுவித்தார் என்று போலீசார் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து, விசாரணைக்காக அந்தப் பெண்ணைக் காவலில் எடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக அவர் கூறினார்.


சட்டவிரோத உறவை ஒப்புக்கொண்ட பெண்


அந்த அதிகாரி, “இறந்தவருடன் தனக்கு சட்டவிரோத உறவு இருந்ததாக அந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார். காவல்துறை பணியாளர், லாட்ஜின் மேலாளர் மற்றும் அறையில் பணியாற்றும் சிறுவனின் வாக்குமூலத்தை பதிவு செய்து பெண் மற்றும் இறந்தவரின் மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளது. கபர்கேரா காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் தொடர்பான வழக்கை பதிவு செய்வதன் மூலம் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR