முன்னாள் வாழ்க்கைத்துணையின் வங்கிக்கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது.


ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ஆம் ஆண்டில் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன் அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், மெக்லைன் விண்வெளியில் இருந்து தனது வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். 



தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன் விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன் தாம் எந்த தவறும் செய்யவில்லை  என்றும் சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து நாசா அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்கு பொருத்தும். உதாரணமாக விண்ணில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒருவர் குற்றம் செய்தால், அவர் ரஷியா நாட்டு சட்ட விதிகளின்படி விசாரிக்கப்படுவார்.