Gold Hallmarking: தங்க நகைகள் மீது கட்டாய ஹால்மார்க் விதி குறித்து நகைக்கடைக்காரர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக நாட்டின் 350 தங்க வியாபாரிகள் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நாட்டில் தேவைக்கேற்ப ஹால்மார்க் மையங்கள் அமைக்கப்படவில்லை என்பதால், ஹால்மார்க் முத்திரை பெற பல காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றம் சாட்டினர்.  இதன் காரணமாக அவர்களின் வணிகம் பாதிக்கப்படும் என்று நகை வியாபாரிகள் சங்கங்கள் கூறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகை வியாபாரிகள் HUID முறையை எதிர்க்கின்றனர்


ஹால்மார்க்கிங் யூனிக் ஐடி (HUID) மிகவும் சிக்கலானது என்றும், இது அதிக நேரம் செயல்முறையாகும், வணிகத்தை ஸ்தம்பிக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாங்கள் அதை எதிர்க்கிறோம் என்று அகில இந்திய மாணிக்கம் மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில் (GJC) கூறுகிறது. இது அதிகாரிகளின் அராஜகம் அதிகரிக்க வழிவகுக்கும் என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தின் போது, ​​அனைத்து நகை நிறுவனங்கள், ஷோரூம்கள் மற்றும் உற்பத்தி யூனிட்கள் இன்று மூடப்பட்டிருக்கும். நகை வியாபாரிகள் பல இடங்களில் உள்ளிருப்பு போராட்டத்தையும் நடத்துவார்கள். ராஜஸ்தானில் சுமார் 50 ஆயிரம் வர்த்தகர்கள், 2 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 5 லட்சம் கைவினைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.


ALSO READ | Hallmark On Gold: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: இன்று முதல் அமல்

இருப்பினும், சனிக்கிழமையன்று, ஹால்மார்க் மிகவும் பயனுள்ளதானது என்றும், வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகவும் மத்திய அரசு கூறியது. BIS ஆனது HUID ஐ தரம் மற்றும் கண்டறியும் தன்மைக்கு சிறந்தது என்று விவரிக்கிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் வணிகம் இரண்டிற்கும் ஹால்மார்க்கிங் மிகவும் பயனுள்ளது என்று அரசாங்கம் கூறியது. ஹால்மார்க் செய்வதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க, அனைத்து ஆய்வகங்களும் முழு அளவில் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியது. நகைக்கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


அதிகாரிகளின் அராஜக போக்கு முடிவுக்கு வரும்: BIS


ஹால்மார்க்கிங் மிகக் குறுகிய காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று BIS கூறுகிறது. 1 கோடிக்கும் அதிகமான நகைகள் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளது. 90,000 க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 4 லட்சம் நகைகள் ஹால்மார்க் செய்யப்படுகின்றன. BIS HUID அடிப்படையிலான ஹால்மார்க் அனைவருக்கும் பயனளிக்கிறது என்று கூறுகிறது. இது தொழில்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருகிறது என்றும், அதிகாரிகளின் அராஜக போக்கு எதுவும் இருக்காது எனவும் அரசு உறுதி அளிக்கிறது.


ஹால்மார்க் செய்வதிலிருந்து யாருக்கு விலக்கு


ஆண்டுக்கு ரூ .40 லட்சத்துக்கு குறைவான வருவாய் கொண்ட நகைக்கடைகளுக்கு அரசு கட்டாய ஹால்மார்க் விதிகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஹால்மார்க் வசதி இல்லாத கிராமப்புறங்களில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கும் விலக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 


ALSO READ | Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR