பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனை நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதோடு, நமது புன்னகையின் அழகை பாதிக்கிறது. தினமும் பல் துலக்குபவர்களுக்கு கூட பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கலாம். பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பலர் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடுகிறார்கள். ஆனால் நீங்கள் இயற்கையான வழியில், செலவில்லாமல்  தீர்வுகளை பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைப்பழத்தோலை பயன்படுத்தி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பழம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் தோலும் அற்புதமான நலன்கள் நிறைந்தது என்பது பலருக்கு தெரியாது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் பற்களை சுத்தம் செய்து வெண்மையாக்க உதவுகிறது. வாழைப்பழத்தோலில், சிலவற்றை கலந்து பயன்படுத்துவதால், அதன் பலன் இரட்டிப்பாகும்.


மஞ்சள் பற்களை சுத்தம் செய்ய வீட்டு வைத்தியம்


தேவையான பொருட்கள்


1. வாழைப்பழத்தோல்: இதில் உள்ள தாதுக்கள் பற்களின் மேல்புறத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் மஞ்சள் நிறத்தை அகற்ற உதவுகிறது.


2. சமையல் சோடா: இது ஒரு இயற்கையான ஒயிட்னராகும், இது கறை மற்றும் புள்ளிகளை நீக்கி பற்களை வெண்மையாக்க உதவுகிறது.


3.எலுமிச்சை சாறு: இதில் இயற்கையான அமிலங்கள் உள்ளன, இது பற்களில் உள்ள பிளேக்கை அகற்றவும், பற்களை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது.


மஞ்சள் பற்களை வெண்மையாக்க எளிதான வழி:


1. ஒரு புதிய வாழைப்பழத்தை எடுத்து தோலுரிக்கவும்.


2. தோலின் வெள்ளை உள் பகுதியை பற்களில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 2-3 நிமிடங்கள் பற்களை தேய்க்கவும்.


3. இப்போது ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்தக் கலவை பேஸ்ட் போல் ஆகிவிடும்.


4. இந்த பேஸ்ட்டை ஒரு பிரஷ் உதவியுடன் பற்களில் தடவி மெதுவாக துலக்கவும்.


5. சில நிமிடங்களுக்குப் பிறகு, வெற்று நீரில் கழுவவும்.


மேலும் படிக்க |  Weight Loss Diet: எட்டு வாரத்தில் 10 கிலோ எடை குறைய... உங்களை ஏமாற்றாத சூப்பர் டயட் பிளான்


கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்


1. இந்த மருந்தை வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் எலுமிச்சையை அதிகமாகப் பயன்படுத்துவது பற்களின் எனாமலை சேதப்படுத்தும்.


2. ஒவ்வொரு முறையும் புதிய வாழைப்பழத் தோலை மட்டும் பயன்படுத்தவும்.


3. சோடா எலுமிச்சைசாறுகொண்டு தேய்த்த பிறகு, சாதாரண பற்பசையுடன் துலக்க மறக்காதீர்கள், இதனால் வாய் ஆரோக்கியஜம் சிறப்பாக இருக்கும்.


வீட்டு வைத்தியத்தின் நன்மைகள்:


1. இயற்கை பொருட்களைக் கொண்ட இந்த மருந்து முற்றிலும் பாதுகாப்பானது.  ஏனெனில்  இதில் எந்த இரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை.


2. இதை வீட்டிலேயே செலவில்லாமல் எளிதாக தயாரிக்கலாம்.


3. தொடர்ந்து செய்து வந்தால், பற்கள் பளபளப்பாகவும், வெண்மையாகவும் இருக்க உதவும்.
எனவே இப்போது அதிக செலவு செய்யாமல், இந்த வாழைப்பழத்தோல் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி, பளிச்சென்ற உங்கள் புன்னகையை மீண்டும் கொண்டு வரலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கொரியன்ஸ் பின்பற்றும் விநோத பழக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ