கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நவராத்திரி (Navaratri 2020) திருவிழா தொடங்கியது. இந்நாளில் பக்தர்கள் தினசரி பூஜைகளை செய்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தொடங்கி வருகிற 26-ஆம் தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கும். நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் என 9 நாளும் 9 வகைகளில் படைக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரியில் முதல் 3 நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த 3 நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி 3  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் ஆகும்.


இந்நிலையில், 8 ஆம் நாளான இன்று நாம் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.


 நவராத்திரி எட்டாம் நாள் பூஜை
தேவி : துர்கை தேவி
மலர் : ரோஜா
நைவேத்தியம்: பாயசம்
திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலமிட வேண்டும்
ராகம் : புன்னகவராளி ராகம். 


நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மா துர்காவின் ஒன்பது அவதாரங்களில் ஒன்றுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷைலாபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கத்யாயினி, கல்ராத்திரி, மகா கவுரி மற்றும் சித்திதத்ரி ஆகிய ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் ஆகும்.


தேவியின் அருளுக்காக இந்த துதியை உச்சரிக்கவும்..


" சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வதே சாதிகே
சரண்யே தரம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே "


இந்த மந்திரத்தை கிட்டத்தட்ட அனைத்து சுபகாரியங்களிலும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். துர்கா தேவி அனைத்தையும் விட புனிதமான, மங்களகரமான கடவுள் ஆவார். மூன்று உலகிற்கும் கடவுளான துர்க்கைக்கு மிகவும் பிடித்த மந்திரம் இதுதான். கௌரி தேவியாய் எழுந்தருளியிருக்கும் தேவியை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரந்தை அடிக்கடி கூறுவது உங்களுக்கு அறிவு, வலிமை மற்றும் செல்வத்தை கொடுக்கும்.


துர்கா தேவி ஸ்துதி மந்திரம்


" யா தேவி சர்வ பூதேட்சு, சாந்தி ரூபேணே சகிஸ்தா
யா தேவி சர்வ பூதேட்சு, சக்தி ரூபேணே சகிஸ்தா
யா தேவி சர்வ பூதேட்சு, மாத்ரி ரூபேணே சகிஸ்தா
யா தேவி சர்வ பூதேட்சு, புத்தி ரூபேணே சகிஸ்தா
நமஸ்த்தியை, நமஸ்த்தியை, நமஸ்த்தியை, நமோ நமஹ "


இந்த மந்திரம் ஒருவருக்கு ஆற்றலையும், நேர்மறை சக்தியையும், வளத்தையும் வழங்கும். இது ஒருவரின் உள்ளார்ந்த அறிவாற்றலை அதிகரித்து மற்றவர்களுடன் ஆரோக்கியமான உறவை வளர்க்க உதவும். இது உங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.


துர்கா தேவி துஹ் ஸ்வப்னா நிவாரன் மந்திரம்


" சாந்தி கர்மானி சர்வத்ர ததா துஹ் ஸ்வப்ன தர்ஷனி
க்ராஹ் பிடாசு சோகரசு மாஹாத்ம்யம் ஸ்ரீனு யான்மம் "


இந்த மந்திரம் உங்களை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும். அதேசமயம் நம் வாழ்க்கையில் சோதனையான காலகட்டத்தில் அமைதியை ஏற்படுத்தவும் இந்த மந்திரத்தை கூறலாம். இது நம்மை எந்தவித தீயசக்திகளும் நெருங்காமல் பாதுகாப்பதுடன் உங்கள் மனதிலும் தைரியத்தை வளர்க்கும்.


துர்கா சத்ரு - சாந்தி மந்திரம்


" ரிபாவஹ் சன்க்ஷாக்யம் யாண்டி கல்யாணம் சோப் பட்யதே
நந்ததே ச்சா குலம் புனசம் மாஹாத்ம்யம் மாம் ஸ்ரீனு யான்மம் "


நம் வாழ்வில் அனைவருமே எதிர்மறை சக்திகளால் ஒரு காலகட்டத்தில் நிச்சயம் பாதிக்கப்படுவோம். இது நம் எதிரிகளாலோ அல்லது உடனிருப்பவர்களாலோ கூட நேரலாம். இந்த தீயசக்திகளிடம் துர்கா தேவி உங்களை பாதுகாக்க இந்த மந்திரம் உதவும். இது நம்மை பாதுகாப்பதோடு நம் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளவற்றை விலக்கும். இது எதிரிகளை அழித்து உங்க வாழ்வில் அமைதியை கொண்டுவரும்.