நவராத்திரி நோன்பு: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது
நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, நாளை முதல் (07-10-2021) துவங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
ALSO READ | காலாவதியான மருந்துகளை வைத்து துர்க்கை சிலையை உருவாக்கிய அசாம் கலைஞர்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும்.
நவராத்திரி முதல் நாள் அம்பிகைக்கு வெண்பெங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். பூஜை நேரம், காலை 10.30-12.00 மணி வரை மாலை - 6 மணி முதல் 7.30 மணிக்குள் வணங்க வேண்டும்.
கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்
காலை 9.15-10.15 மணி.
மாலை 4.45 - 5.45 மணி
அமாவாசை திதி இருக்கும் போதே செய்வது சிறப்பு. கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
ALSO READ | அகண்ட ஜோதியில் படிவது கரி அல்ல, குங்குமப்பூ! ஜோத்பூர் தெய்வத்தின் திருவிளையாடல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR