நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, அக்டோபர் 15 ம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 23 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி பண்டிகை 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும்.


நவராத்திரி கலசம் அல்லது கொலு வைக்க உகந்த நேரம்:
நவராத்திரி தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 முதல் 1.30 மணி வரை எமகண்டம் ஆகும். தொடர்ந்து, பகல் 3 முதல் 4.30 வரை குளிகையும், மாலை 4.30 முதல் 6 வரை ராகு காலமும் வருகின்றது. இதனால் கலசம் வைத்து வழிபடுபவர்களும், கொலு வைத்து வழிபடுபவர்களும் பகல் 12 மணிக்கு முன்பாக கொலு அமைத்துவிட வேண்டும். மேலும் முதல் நாள் வழிபாட்டினை மாலை 6.15 மணிக்கு மேல் தொடங்குவது சிறந்தது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி வரை மகாளய பட்சம் உள்ளது. அது நிறைவடைந்த அடுத்த நாளான அக்டோபர் 15 ம் தேதி நவராத்திரி துவங்குகிறது. 


மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களை யாருக்குமே பிடிக்காது..! யார் தெரியுமா..?


அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.


ஷரத் நவராத்திரி:
இந்த ஆண்டு அம்பிகை யானை மீது வலம் வருகிறார். இந்த ஷரத் நவராத்திரியில் துர்க்கையின் சவாரி யானை என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு நல்லதாக அமையும்.


நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.


நவராத்திரி நாளில் சூரிய கிரகணம்:
அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.57 உடன் அமாவாசை நிறைவடைந்து விடுகிறது. அதற்கு பிறகு பிரதமை துவங்கி விடும். அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.24 மணிக்கே நவராத்திரி துவங்கி விடுகிறது. ஆனால் அக்டோபர் 14 ம் தேதி இரவு 08.34 மணிக்கே சூரிய கிரகணம் துவங்கி விடுகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி அதிகாலை 2.25 மணி வரை கிரகணம் உள்ளது. கிரகண நேரத்தில் நவராத்திரி துவங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம் கடஸ்தாபனம் என்பது நவராத்திரியின் மிக முக்கியமானது என்பதால் கிரகணம் முடிந்த பிறகு சில முக்கிய விஷயங்களை செய்த பிறகு, கலசம் அமைக்கலாம். சூரிய கிரகணம் அதிகாலையிலேயே நிறைவடைந்து விடும் என்பதால் அக்டோபர் 15 ஆம் தேதி காலையில் கலசம் அமைத்து கொலு அமைப்பதற்கான வேலைகளையும், நவராத்திரிக்கான ஏற்பாடுகளையும் செய்யலாம்.


இருப்பினும் கிரகணம் முடிந்ததும், அக்டோபர் 15 ம் தேதி காலை கண்டிப்பாக வீடு முழுவதையும் சுத்தம் செய்து, கங்கை நீர் உள்ளிட்ட புனித தீர்த்தங்களை தெளித்த பிறகு தினசரி வழிபாட்டினையும், நவராத்திரி வழிபாட்டினையும் துவங்கலாம். துளசி செடியின் மீதும் சிறிது தண்ணீர் தெளித்து விட வேண்டும். வீடு முழுவதும் சுத்தம் செய்த பிறகு நாமும் குளித்து, சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். அவை அனைத்தையும் செய்து முடித்த பிறகே கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | தோல்வியை கண்டால் பயந்து நடுங்கும் ‘அந்த’ 5 ராசிக்காரர்கள்..! யார் தெரியுமா..?\


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ