நிலையான வருமானம் உள்ள எவரும் எதிர்காளத் தேவைகளை கருத்தில் கொண்டு, நல்ல வருவாய் கொடுக்கும் இடங்களில் பணம் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இது அவர்களின் முதுமையில் பயனளிக்கும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது, அதோடு, அந்த சேமிப்புத் திட்டத்திற்கு சில போனஸ்கள் கிடைத்தால் அதற்கும் வருமான வரி இருக்காது என்றால், அது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தானே? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களின் நலனுக்காக, கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு (Gram Suraksha or Whole Life Assurance) என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.


தபால் நிலையத்தின் கிராம் சுரக்ஷா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:


1. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19; அதிகபட்ச வயது 55.
2. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை10 லட்சம் ரூபாய் ஆகும்.
3. 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் வசதி உண்டு 
4. 5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது 5.இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் விருப்பத் தெரிவுகள் உண்டு. அவை: 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள்
தற்போது, இந்தத் திட்டத்திற்கு அஞ்சல் துறை அறுபதாயிரம் ரூபாய் போனஸ் வழங்குகிறது.


Also Read | குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பை அதிகரித்தது மத்திய அரசு


ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம்1515 ரூபாயாக இருக்கும். 58 வருடங்களுக்கு 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும் 


55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும். 58 வருடங்களுக்கு முதிர்வு பலன் 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 ஆண்டுகளுக்கு முதிர்வு பலன் 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும். 


இந்த பாலிசியில் நாமினேஷன் என்னும் நியமன வசதியும் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 


அஞ்சலக காப்பீடு தொடர்பாக ஏதேனும் கேள்வி இருந்தால், 1800 180 5232/155232 என்ற நீங்கள் கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். இது தவிர, வேறு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், http://www.postallifeinsurance.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.


Also Read | Wedding Gift: 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக கொடுத்து அசத்தும் நடிகர் மயில்சாமி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR