Neeraj Chopra Diet: பாரிஸ் ஒலிம்பிக் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் தொடர் வரும் ஆக. 11ஆம் தேதி அன்று நிறைவடைய உள்ளது. இந்தியா இதுவரை துப்பாக்கிச் சுடுதலில் 3 வெண்கலப் பதக்கங்களையும், ஹாக்கியில் 1 வெண்கலப் பதக்கத்தையும், ஈட்டி எறிதலில் 1 வெள்ளிப் பதக்கத்தையும் என 5 பதக்கங்களை பெற்றிருக்கிறது. தற்போது இந்தியா புள்ளிப்பட்டியலில் 64ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா


கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா 4 வெண்கலம், 2 வெள்ளி, 1 தங்கம் என 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தை பிடித்திருந்தது. ஆனால், இம்முறை அந்த இடத்தை பிடிப்பது இனி கடினம் எனலாம். தங்கம் வெல்லும் வாய்ப்பை நீரஜ் சோப்ரா மட்டுமே வைத்திருந்தார். அவரும் நேற்று பாகிஸ்தான் வீரரிடம் தங்கத்தை பறிகொடுத்து வெள்ளிப் பதக்கத்தையே பெற்றார். அவர் தங்கம் வென்றிருந்தால் நிச்சயம் இந்தியா 46ஆவது இடத்திற்கு சென்றிருக்கும். இருப்பினும் நீரஜ் சோப்ரா சிறப்பான ஆட்டத்தையே வெளிக்காட்டினார். அவரிடம் குறை என சொல்வதற்கு எதுவுமில்லை எனலாம்.


வெற்றிக்கான வெறி...


நீரஜ் சோப்ரா இதுவரை 90 மீட்டர் தூரத்தை எட்டியதில்லை என்றாலும் கூட தொடர்ச்சியாக சிறப்பான தூரத்திற்கு ஈட்டியை வீசக்கூடிய வல்லமைப் படைத்தவர் ஆவார். இந்த வல்லமைதான் 2016இல் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ஆரம்பித்து, தற்போது 2024 ஒலிம்பிக் தொடர் வரையிலான பதக்க வேட்டைக்கு முக்கிய காரணம் எனலாம். 140 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நம்பிக்கைச் சுமந்து சென்ற அந்த 26 வயது இளைஞரின் தோள்பட்டையிலும், கால்களிலும், அத்தனை தசைகளிலும் வெற்றிக்கான வெறி அடங்கியிருக்கிறது என்பதை நேற்றைய போட்டியை பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும்.


மேலும் படிக்க | நயன்தாராவிடம் இந்த 5 விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்..!


நீரஜ் சோப்ராவின் கட்டுக்கோப்பான உடல்


கட்டுக்கோப்பான அந்த உடல்தான் நீரஜிற்கு மட்டுமின்றி இந்தியாவுக்காக இத்தனை பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு உடலை வைத்திருக்க நீரஜ் சோப்ரா எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறார் என்பதை அறிய இணையத்தில் பலரும் விரும்புகின்றனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 


நீரஜ் சோப்ராவின் உணவுப் பழக்கவழக்கத்தில் பழங்கள் மற்றும் புரத உணவுகள் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. தசைகளை வலுப்படுத்தவும், முழு உடலிலும் ஆரோக்கியமான அளவில் கொழுப்பை பராமரிக்கவும் இவை உபயோகமாகிறது. அவரது தொடர் பயிற்சிக்கும், தினந்தோறும் தேவைப்படும் சக்திக்கு கூடுதல் புரதத்தை எடுத்துக்கொள்கிறார். அந்த வகையில் காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் அவர் அடிக்கடி உண்ணும் உணவுகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.


நீரஜ் சோப்ராவின் உணவுப் பழக்கவழக்கம்


ஓட்ஸ், தினமும் 3-4 முட்டைகளின் வெள்ளைப் பகுதிகளையும், 2 துண்டுகள் பிரெட், ஒரு கிண்ணத்தில் பருப்பு உணவு (Dalia), பழங்கள், உலர்ந்த பழங்கள், யோக்ர்ட், ஆம்லேட் ஆகியவைதான் இவரின் காலை உணவுகள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவர் தயிர் சாதம், பருப்பு வகைகள் சாலட்கள், கிரில் செய்த சிக்கன், சால்மன் மீன் ஆகியவற்றை மதிய உணவாக சாப்பிடுகிறார். சூப்கள், பழங்கள், வேகவைத்த காய்கறிகள் உள்ளிட்ட மிதமான உணவு வகைகளை மட்டும் இரவில் சாப்பிடுவாராம். சியா விதைகள், இளநீர், வாழைப்பழம், உலர் பழங்கள், ஜூஸ்கள் ஆகியவற்றை ஸ்நாக்ஸாக உட்கொள்கிறார். இதுதான் அவரின் கட்டுக்கோப்பான உடற்தகுதியின் அடிப்படை ரகசியமாகும்.


மேலும் படிக்க | சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ