இந்த கொரோனா காலத்தில் இணையத்தின் பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. இதனுடன், ஆன்லைன் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேக்கர்களுக்கு இது போன்ற பயனர்கள் சீக்கிரம் இறையாகி விடுகிறார்கள். கூகிளில், நீங்கள் தேடும், அதாவது சர்ச் செய்யும் விதத்தை ஹேக்கர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்,  நீங்கள் செய்யும் சிறு தவறு போது. ஹேக்கர்களுக்கு அது வரப்பிரசாதமாக ஆகி விடுகிறது. 


வங்கி தகவல்களை தேட  வேண்டாம்


கொரோனா காலத்தில் (Corona VIrus) ஆன்லைன் வங்கி மற்றும் பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன. இது பல நன்மைகள் இருக்கும் அதே சமயத்தில் தீமைகளும் உள்ளன. ஆன்லைனில் மோசடி செய்யும் ஹேக்கர்கள் வங்கி போன்ற URL ஐ உருவாக்குகிறார்கள். இதற்குப் பிறகு, அந்த வங்கியின் பெயரை உள்ளிடும்போது, கவனக்குறைவால், அந்த வங்கியின் வலைதளம் என நினைத்து, அதுனுள் சென்றால், உங்கள் கணக்கில் இருக்கும் பணம் பறி போகலாம்.எனவே, கூகிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வங்கியைப் பற்றிய தகவல்களை எப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள்.


கஸ்டமர் கேர்  எண்ணைத் தேட வேண்டாம்


எந்தவொரு கஸ்டம்ர் கேர் எண் வேண்டும் என்றாலும்,  கூகிளில் (Google) தேடுகிறோம். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மோசடிக்கு பலியாகின்றர். ஹேக்கர்கள் நிறுவனத்தின் போலி வலைத்தளத்தை உருவாக்கி, அவர்களின் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி தகவல்களை பதிவிடுகிறார்கள், நாங்கள் தேடிய தகவல்களை அவர்களுக்கு வழங்குகிறோம் என்று வலையை விரிக்கிறார்கள். எனவே, எப்போதும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.


ALSO READ | WhatsApp-ன் அசத்தலான 3 அம்சங்கள், போனை தொடாமலேயே மெசேஜ் அனுப்பலாம்


கூகிள் மருத்துவராக நினைக்க வேண்டாம்


பெரும்பாலும், பலர் கூகிளை ஒரு மருத்துவராகவே கருதுகிறார்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளை வைத்து மருந்துகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது தங்களது உயிருக்கே ஆபத்து என்பதை பலர் உணருவதில்லை. நோய் குறித்த தகவல்களை சேகரிப்பது தவறல்ல, ஆனால் கூகிளில் காட்டப்படும். எந்தவொரு வலைத்தளத்தில் பரிந்துரைப்படி,  சிகிச்சை அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் தீங்கு விளைவிக்கும்.


திட்டங்கள் குறித்த தகவல்களை அரசாங்க வலைத்தளத்திலிருந்தே பெறுங்கள்


மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கிறது. அனைத்து திட்டங்கள் பற்றிய தகவல்களும் இணையத்தில் கிடைக்கிறது. இந்த திட்டங்களுக்கு அரசின் சொந்த வலைத்தளம் உள்ளது, அந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் அதில் நீங்கள் பெறலாம். பெரும்பாலும் இணையத்தில் நடக்கும் குற்றவியல் மோசடிகள் அரசாங்க வலைத்தளங்கள் போன்ற போலி வலைத்தளங்களை பயன்படுத்துவதால் நடக்கின்றன. இதை நாம் தவிர்க்க வேண்டும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR