லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, ஆதார் அட்டையை வழங்கும் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) PVC கார்டு எனப்படும் மிகவும் பாதுகாப்பான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PVC கார்டு (PVC Card) என்பது உங்களிடம் உள்ள அதே ஆதார் அட்டைதான், ஆனால் இது சிறப்பான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இது இந்த அட்டையை இயல்பாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்வதை எளிதாக்குகிறது.


Aadhaar PVC Card என்றால் என்ன?


Aadhaar PVC Card-ல் புகைப்படத்துடன், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான QR code, புள்ளிவிவரங்கள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. ஆதார் எண் (Aadhaar number), மெய்நிகர் ஐடி (Virtual ID) அல்லது பதிவு ஐடி (Enrolment ID) ஆகியவற்றை பயன்படுத்தி uidai.gov.in அல்லது resident.uidai.gov.in ஆகிய வலைதளங்களிலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். 50 ரூபாய் என்ற பெயரளவு கட்டணத்தை செலுத்தி இந்த கார்டை நீங்கள் பெறலாம். இது உங்கள் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


ALSO READ: Hitech ஆனது Aadhaar Card: நனையாது, கிழியாது…apply செய்யும் வழி இதோ


Aadhaar PVC Card-ன் பாதுகாப்பு அம்சங்கள்


ஆதார் பி.வி.சி கார்டில் பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.


- பாதுகாப்பான QR குறியீடு


- ஹாலோகிராம்


- மைக்ரோ டெக்ஸ்ட்


- கோஸ்ட் இமேஜ்


- வெளியீட்டு தேதி & அச்சு தேதி


- Guilloche Pattern


- எம்போஸ்ட் ஆதார் லோகோ


Aadhaar PVC Card-க்கு பணம் செலுத்தும் முறைகள் யாவை?


பின்வரும் ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்:


க்ரெடிட் அட்டை


டெபிட் கார்டு


நெட் பேங்கிங்


UPI


Aadhaar PVC Card-ஐ எவ்வாறு ஆர்டர் செய்வது?


12 இலக்கங்கள் கொண்ட ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்கங்கள் கொண்ட மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்கங்கள் கொண்ட பதிவு ஐடியைப் பயன்படுத்தி UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ரெசிடெண்ட் போர்டலுக்கு சென்று "Aadhaar Card” கோரிக்கையை நீங்கள் எழுப்பலாம்.


பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணைப் பயன்படுத்தியும் கோரிக்கையும் எழுப்ப முடியும். உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலம் நீங்கள் கோரிக்கையை எழுப்பினால், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP / TOTP பெறப்படும். பதிவு செய்யப்படாத / மாற்று மொபைல் எண்ணிலிருந்து எழுப்பப்படும் கோரிக்கைக்கு, பதிவு செய்யப்படாத / மாற்று மொபைல் எண்ணில் OTP பெறப்படும்.


ALSO READ: எந்த வகை ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்: UIDAI கூறுவது என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR