வர்த்தகர்கள் சில நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். சில நாணயங்களை, வங்கிகள் திரும்பப் பெற்ற பிறகு, சந்தையில் உள்ள கடைக்காரர்களும் அவற்றைப் பெற மறுக்கின்றனர். வங்கியில் நாணயங்களை டெபாசிட் செய்ய தயக்கம் இருக்கும் நிலையில், பெரிய கடைக்காரர்கள் கூட  நாணயங்களை  வாங்க மறுக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் ஏற்கனவே இருப்பு அதிக அளவில் நாணயங்கள் இருப்பதாக கூறி கடைக்காரர்கள் நாணயங்களை வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.அதேநேரம், சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐம்பது பைசா, ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நாணயங்கள் கடைக்காரர்கள் மற்றும் மக்களிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வங்கியும் நாணயங்களை ஏற்க மறுக்க முடியாது


பாங்க் ஆப் பரோடாவின் மேலாளர் இது குறித்து கூறுகையில், எந்த வங்கியும் நாணயங்களை வாங்க கொள்ள மாட்டோம் என மறுக்க முடியாது. ரிசர்வ் வங்கியால் எந்த நாணயமும் புழக்கத்தில் இருந்து எடுக்கப்படவில்லை. ஒரு கடைக்காரர் நாணயத்தை வாங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.


ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட எந்த நாணயமும் புழக்கத்தில் இருந்து அகற்றப்படவில்லை என்று மாவட்ட அஞ்சல் அலுவலகக் கண்காணிப்பாளர் கூறுகிறார். கணக்கு வைத்திருக்கும் எவரும் தபால் நிலையத்திற்கு நாணயங்களைக் கொண்டுவந்தால், அவை வங்கிகள் ஏற்றுக் கொண்டு தொகையை  டெபாசிட் செய்யலாம்.  பின் அந்த நாணயங்கள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை தபால் நிலைய நாணயங்கள் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத வழக்குகள் எதுவும் வெளிவரவில்லை. அது மட்டுமல்ல கோவில்களில் ஒன்று மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்கள் காணிக்கையாக வருகின்றன. அதே நேரத்தில், நன்கொடை பெட்டியைத் திறக்கும்போது, ​​அதிலும் அதிக அளவில் நாணயங்கள் கிடைக்கின்றன. 


மேலும் படிக்க | ரூ.2,000 நோட்டு விவகாரம்: ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்


தண்டனை


இந்திய தண்டனைச் சட்டத்தின் 489A முதல் 489E வரையிலான பிரிவுகளின் கீழ், நோட்டுகள் அல்லது நாணயங்களை போலியாக அச்சிடுதல், கள்ள நோட்டுகள் அல்லது நாணயங்களை புழக்கத்தில் விடுதல் மற்றும் உண்மையான நாணயங்களை ஏற்க மறுப்பது ஆகியவை குற்றமாகும். இந்தப் பிரிவுகளின் கீழ், நாணயங்களை ஏற்றூக் கொள்ள மறுத்தால், நீதிமன்றத்தால் பண அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், யாராவது உங்களிடமிருந்து நாணயத்தை வாங்க மறுத்தால், தேவையான ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்கலாம்.


 ரிசர்வ் வங்கியின் விதி


இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் உள்ள கரன்சியை திரும்பப் பெறுவதாக அறிவிக்கும் வரை யாரும் அதை எடுக்க மறுக்க முடியாது. ஏனெனில் இது சட்டத்தை மீறும் செயலாகும். ரிசர்வ் வங்கி நாணயத்தை ஏற்க மறுப்பது பிரிவு 124A-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். தேசிய நாணயத்தை அவமதிப்பது தேசத்துரோக வகையின் குற்றமாகும். இதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றமும் அபராதம் விதிக்கலாம்.


மேலும் படிக்க | அப்போதே நோ சொன்ன மோடி... ரூ. 2000 வாபஸ் பெறுவதற்கு இதுதான் காரணமா?


முதல் தகவல் அறிக்கை


ஒரு நபர் எந்த நாணயத்தையும் ஏற்றூக் கொள்ள மறுத்தால் (புழக்கத்தில் இருக்கும் நாணயம் ) அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். அவர் மீது இந்திய நாணயச் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ரிசர்வ் வங்கியிலும் புகார் அளிக்கலாம். அதன் பிறகு, நாணயங்களை ஏற்க மறுக்கும் கடைக்காரர் அல்லது யார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ