Royal Enfield நிறுவனத்தின் புதுவரவு - முழுவிவரம் உள்ளே!
Royal Enfield நிறுவனத்தின் புதுவரவுகளான Interceptor 650 மற்றும் Continental GT 650 வாகனங்களின் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது!
Royal Enfield நிறுவனத்தின் புதுவரவுகளான Interceptor 650 மற்றும் Continental GT 650 வாகனங்களின் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது!
பிரபல இரு சக்கர வாகனமான Royal Enfield நிறுவனத்தின் அடுத்த வரவுகளான Interceptor 650 மற்றும் Continental GT 650 ஆகிய இரண்டு பைக்குகளும் இம்மாத இறுதியில் வெளியாக காத்திருக்கின்றன. முன்னதாக இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்த பைக்குகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் சில காரணங்களால் இந்த வாகனம் வெளியீடு தள்ளிப்போனது.
எனினும் இந்த பைக்குகளின் மீதான இளைஞர்களின் ஆர்வும் குறையவில்லை, இதன் காரதணாமாக இந்த இரண்டு வாகனங்களின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த புகைப்படங்களில் உள்ளது போல், Interceptor 650 ஆனது வட்ட முன் விளக்கு, நீள பெட்ரோல் டோங்க், நீமட்டப்பட்ட ஹாண்டல் பார்கள் மற்றும் தட்டையான சீட்டுகள் என அட்டகாசமாக வெளிவருகின்றது. அதேப்போல் Continental GT 650 ஆனது வட்ட முன் விளக்கு, நீள பெட்ரோல் டோங்க், நீமட்டப்பட்ட ஹாண்டல் பார்கள் மற்றும் தட்டையான சீட்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த இரண்டு RE-களும் ஒரே மாதிரியான என்ஜின்களை கொண்டு வருகிறது. இரண்டு வண்டிகளுக்கும் ஸ்பார்க் சக்கரங்கள் கொடுக்கப்பட்டு கிளாஸிக் லுக்கினை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டு வண்டிகளின் வசதிகளும் ஒருமித்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக 648cc, இணை இரட்டை சிலிண்டர், 7,100 rpm -ல் 47 bhp திறன் மற்றும் 52 Nm torque @ 5,200 rpm, 6 வேக கியர்பாக்ஸ். 320 mm discs, முற்பகுதியில் 240 mm discs என பல வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. Harley Davidson Street 750 வாகத்திற்கு இணையாக ஒப்பிடப்படும் இந்த வாகனங்களின் விலையானது இந்தியாவில் 3 லட்சம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது!