புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வெளியிடுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள். 


இதையொட்டி சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.


கடந்த 1931ம் ஆண்டு ISI எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறை அமைச்சகம் சார்பில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நாளை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவு ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார்.