EPFO புதிய விதி: இனி உங்களுக்கு அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால், பிஎஃப் கணக்கிலிருந்து (PF Account) பணம் எடுக்கலாம். கொரோனா காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் (EPFO) விதிகளை மாற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கில் பணம்:
புதிய பிஎஃப் விதியின் படி, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க மூன்று முதல் ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை, ஆனால் இப்போது ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பிஎஃப் பணம் வந்துவிடும்.


முன்பணமாக ஊழியர்கள் 1 லட்சம் வரை பெறலாம்:
மத்திய அரசு பிஎஃப் விதிகளை மாற்றியுள்ளது. இதனால் அவசர காலங்களில் பிஎஃப் பணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வருங்கால வைப்பு (Provident Fund) தொகையிலிருந்து முன்பணமாக ஊழியர்கள் 1 லட்சம் வரை திரும்பப் பெறலாம். ஆனால் இந்தச் சேவையைப் பெற நீங்கள் அவசரநிலை காரணமாக பெற்ற பணத்திற்கான செலவைக் காட்ட வேண்டும்.


ALSO READ | EPF-ல் பெரிய மாற்றம்: இனி ஊழியர்களிடம் இருக்கும் 2 PF கணக்குகள், விவரம் இதோ


மருத்துவ செலவு தேவைக்கு பில் அவசியமில்லை:
மருத்துவ அவசரகாலத்தில் செலவாகும் பணத்தை நீங்கள் செலுத்திய பிறகு, அதன் விவரங்களை EFFO அலுவலகத்திற்கு அனுப்பிய பிறகு, நீங்கள் பிஎஃப் தொகையில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தற்போது மருத்துவ அவசரகாலத்தில் பணம் தேவை என்றால், நீங்கள் எந்த விதமான பில்லையும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.


ALSO READ | 2022ம் ஆண்டு வரை தொழிலாளர்களுக்கு பி.எப் தொகையை மத்திய அரசு செலுத்தும் -நிதியமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR