COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

New Wage Code: மத்திய அரசு புதிய ஊதியக் குறியீட்டை விரைவில் அமல்படுத்த உள்ளது. அதில், சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாற்றப்பட உள்ளன.


புதிய ஊதியக் குறியீட் வேலை நாட்கள் தொடர்பாக  புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது அமல்படுத்தப்பட்டா,  நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய ஊதியக் குறியீடு வேலை நேரம் ஊழியர்களின் வேலை நேரம் 9 முதல் 12 வரை அதிகரிக்கும். இதில் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். சில தொழிற்சங்கங்கள் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு விதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தன. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்யும் நபர், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். அவருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். ஆனால்,  ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதுமானது. அவ்வாறு பணியாற்றும் நபருக்கு வாரத்தில்  3 நாட்கள் விடுப்பு கொடுக்க வேண்டும்.


ALSO READ | Basic Salary Hike: ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும், அக்டோபர் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றம்


ஊழியர்களின் (Earned Leave) விடுப்பை 240 முதல் 300 ஆக உயர்த்தலாம். தொழிலாளர் ஊதிய குறியீட்டு விதிகளில் மாற்றங்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இடையே ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதில் ஊழியர்களின் எர்ண்ட் லீவ் என்னும் வகை விடுப்பை 240 முதல் 300 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.


இது தவிர, இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, எந்த ஊழியரும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய கூடாது என்ற விதியும் உள்ளது. ஊழியருக்கு ஒரு அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். 


புதிய ஊதியக் குறியீடு இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்கள் இதை செயல்படுத்த இன்னும் தயாராகவில்லை. ஆனால் இப்போது அதை அக்டோபரில் மத்திய அரசு செயல்படுத்தக்கூடும்.


ALSO READ: RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR