இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பணிபுரிய விருப்பமா? இது உங்களுக்கான செய்தி…
காலியாக உள்ள பணியிடங்களுக்காக தற்போது ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். எனவே உடனே விண்ணப்பிக்கவும். அவசரப்படவேண்டாம், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கியின் மருத்துவ ஆலோசகர் (Bank’s Medical Consultant (BMC)) பணிகளுக்கு உள்ள காலியிடத்தை மத்திய வங்கி நிரப்புகிறது.
இந்தப் பணிக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
Also Read | கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் மருத்துவப் படிப்பு (MBBS Degree) படித்து அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொது மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பு (Master’s Degree in General Medicine) தேர்ச்சி பெற்றவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வங்கி பணிகளில் 3-5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் என்ற ஊதியத்தில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்கூறிய தகுதி உடையவர்கள், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பவும். இந்த வேலைவாய்ப்புத் தொடர்பாக மேலதிக தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Download Notification PDF 2021
ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம் என்ற ரிசர்வ் வங்கியின் இந்த வேலைவாய்ப்பு பற்றி பரவலாக பலருக்குத் தெரியவில்லை.
Also Read | Microsoft: பத்தே மாதத்தில் லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR