புதுடெல்லி: 2021 ஆம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடிந்து புத்தாண்டாக புலர இருக்கும் 2022 அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கட்டும். இந்த ஆண்டின் நிறைவையும் அடுத்த ஆண்டின் துவக்கத்தையும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் கொண்டாட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020 கொரோனாவால் அச்சம் என்றால், இந்த ஆண்டை டெல்டா வைரஸ் திரிபு பாதித்தது. இப்போது ஒமிக்ரான் அச்சம் இருந்தாலும், ஆண்டு முழுவதும் கலக்கத்திலும் குழப்பத்திலும் கழிந்ததால், புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்கள் ஆவலாக உள்ளனர்.


புத்தாண்டு விழா (New Year) என்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நம்பிக்கையின் வித்தை விதைக்கிறது. உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து அவர்களுடன் நாம் வாழ்த்துகளையும் பரிசுகளையும் இந்த நாளில் பரிமாறிக்கொள்கிறோம். தற்போதைய நவீன தொழில்நுட்பங்களால் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் நம் பாசத்தை பகிர்ந்து மகிழ்றோம்.


 உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை அனுப்புவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. புதிய செயலிகள்மற்றும் சமூக ஊடக தளங்களின் உதவியுடன் ஆக்கப்பூர்வமான முறையில் துரிதமாகவும், கருத்து செறிவுள்ளதாகவும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.


READ ALSO | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 


நமது வாழ்க்கையில் ஒன்றிணைந்து விட்ட வாட்ஸ்அப், இந்த புத்தாண்டில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க உதவுகிறது. வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுடன் (Whatsapp Stickers) வாழ்த்து தெரிவிப்பது ஒரு மிக நல்ல முறையாக இருக்கும்.


வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு கொண்டாட்டம் மற்றும் சிறப்பு நாட்களுக்கு ஸ்டிக்கர்களை வழங்குகிறது. இன்னும் பலவிதமான ஸ்டிக்கர்களைப் பெற பயனர்கள் மூன்றாம் தரப்பின் செயலிகளை Playstore-லிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


WhatsApp-ல் புத்தாண்டு 2022 ஸ்டிக்கர்களை அனுப்பும் முறை:


Step 1: முதலில் Playstore-க்கு சென்று, ‘New Year 2022 Stickers for WhatsApp’ என்று டைப் செய்யவும்.


Step 2: App-ஐப் பதிவிறக்கவும். இப்போது, ​​புத்தாண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களின் பட்டியல் கிடைக்கும். விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Step 3: பதிவிறக்கம் செய்த ஸ்டிக்கர்களை உங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்க வேண்டும். விண்டோவின் வலது மூலையில் உள்ள '+' பொத்தானைக் கிளிக் செய்யவும்.


Step 4: ஸ்டிக்கர்களை WhatsApp-ல் சேர்க்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் பாப்-அப் திரையில் தோன்றும்.


Step 5: 'ADD' பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் உங்கள் WhatsApp-ல் சேர்ந்துவிடும்.


இந்த புத்தாண்டை வித்தியாசமான ஸ்டிக்கர்களை பகிர்ந்து, மகிழ்ச்சியை பரப்பவும்.


ALSO READ | இந்த தப்பை செய்தா 2022 பாடாய் படுத்திவிடும்!


WhatsApp மூலம் புத்தாண்டு ஸ்டிக்கர்களை அனுப்புவது:


Step 1: WhatsApp-ல் நீங்கள் பதவிறக்கம் செய்த ஸ்டிக்கர்கள் தோன்றுகின்றனவா என்பதை சரிபார்க்கவும்.


Step 2: புத்தாண்டு ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் நபரின் விண்டோவைத் திறக்கவும்.


Step 3: டைபிங் பாரில் உள்ள ஸ்மைலி ஐகானைக் கிளிக் செய்யவும்.


Step 4: ஸ்டிக்கர்கள் பிரிவில் கிளிக் செய்யவும்.


Step 5:  நீங்கள் புதிதாக சேர்த்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் அதில் இருக்கும். 


Also Read | Time capsule: 130 ஆண்டுகள் பழமையான கால இயந்திரம் கண்டுபிடிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR