Financially Strong Zodiac Sign In 2022: 2021 ஆம் ஆண்டு இன்னும் 2 நாட்களுக்குள் முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிதாக பிறக்கப் போகும் 2022ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். அதன்படி வரும் 2022-ம் ஆண்டு கிரகங்களின் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) பண வரவு ஏற்படும் என்பதை பார்ப்போம்.
சிம்மம் - நிதி சம்பந்தமாக சில நுட்பமான சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மாணவர்களுக்கு படிப்பதற்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. படித்து முடித்து விட்டு காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். இருக்கும் எடுக்கும் எந்த முடிவையும் கவனமாக எடுக்கவும்.
ALSO READ | Weekly Horoscope: ஆண்டின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாய் உள்ளது
கன்னி - 2022 ஆண்டு நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் வரவு அமோகமாக இருக்கும். வரும் புத்தாண்டு உங்களுக்காக சமநிலையில் இருக்கும். உங்களுக்கு மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு: 2022ஆம் ஆண்டு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிலும் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் பயணம் செய்கிறார். உங்களுக்கு மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் பளு நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
மகரம்: புத்தாண்டில் சங்கடங்கள் நீங்கி சாதனை புரியும் ஆண்டாக அமையப்போகிறது. உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். டென்சன், மன அழுத்தம் குறையும். திடீர் வருமானத்தை தரும். வெளிநாடு பயணங்கள் செல்லும் காலம் கை கூடி வந்துள்ளது. மாணவர்களுக்கு படிப்பதற்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. படித்து முடித்து விட்டு காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் மாற்றமும் புரமோசனும் கை கூடி வரும். அரசு அதிகாரிகளுக்கு பளு நீங்கும் புதிய பொறுப்புகள் வரும். வேலைக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீண் பழிகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்: 2022ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு கவனமும் விழிப்புணர்வும் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். புது வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் கை கூடி வரும். மொத்தத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | அடுத்த 2 நாட்களுக்குள் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR