நியூசிலாந்த் நாட்டில் உள்ள பறவைகளை காக்கும் நோக்கில் அந்நாட்டு சுற்றுச்சூழல் அதிகாரிகள் வீடுகளில் பூனைகளை வளர்க்க தடைவிதிக்க திட்டமிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்த் நாட்டின் ஒமாயி என்னும் கிராமத்தில் பல அரிய வகை பறைவையினங்கள் காணப்படுகிறது. இப்பறவைகள் அக்கிராமத்தில் உள்ள செல்ல பிராணிகள் கொன்று குவித்து வருகின்றன. இதன் காரணமாக அரிய வகை பறவையினங்களும் அழிக்கப்பட்டு வருகிறது என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


எனவே இக்கிராமத்தில் உள்ள செல்ல பிராணிகளை நடைமுறை படுத்தும் திட்டத்திற்கு இந்த அமைப்பு அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது. 


இத்திட்டத்தின்படி ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் பூனைகளுக்கு மைக்ரோசிப் கொண்ட பதிவு எண் போன்ற அம்சங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இப்பூனைகளுக்கு நெறிமுறை பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையில் புதிய பூனைகளை அக்கிராமத்தில் வளர்பதற்கும் தடை விதிக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் பையோ செக்கியூரிட்டி நடவடிக்கை மேலாளர அலி மேடி தெரிவித்துள்ளார்.


இத்திட்டத்திற்கு அக்கிராம மக்கள் தரப்பில் இருந்து இதுவரை நேர்மறையான கருத்துக்கள் வரவில்லை. வீட்டில் வளர்கப்படும் பூனைகள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகின்றது என அக்கிராம மக்கள் வளியுறுத்தி வருகின்றனர். 


தன் வீட்டில் பூனைகள் இல்லை என்றால், நான் உடல்நல குறைவாக வசிப்பது போலவே உணர்கின்றேன் என அக்கிராமவாசி ஜாரவிஸ் தெரவித்துள்ளார்.