3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது!
அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
அந்த வகையில் ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரின் பெயர் அறிவிப்பு நேற்று முதல் துவங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒளியியல் சாமணம் மற்றும் உயிரியல்" அமைப்புகளுக்கு தொடர்பான ஆராய்ச்சியில் பெரும் பங்களிப்பு அளித்ததன் காரணமாக ஆர்தர் அஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ழ
அதேப்போல் ஜெரார்டு மௌரோ மற்றும் டோன்னா ஸ்ரிக்லாண்ட் ஆகியோரின் "அதிக தீவிரம், தீவிர குறுகிய ஒளியியல் பருப்புகளை உருவாக்குவதற்கான இன்றியமைய முறைமைக்காக." நோபல் பரிசு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!