இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!
இந்தியாவில் பலதரப்பட்ட உணவுகள், கலாச்சாரங்கள் இருக்கும் வேளையில் ஒரு சில நகரங்களில் மட்டும் உங்களால் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம் உள்ளது. ஆடை அணிவது தொடங்கி, தினசரி வேலை, உணவு என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கம் உள்ளது. ஒரு சில நகரங்களில் அசைவ உணவை உங்களால் சாப்பிட முடியாது. இந்தியாவில் கிட்டத்தட்ட 40% மக்கள் சைவ உணவு உண்பவர்களாக உள்ளனர். இருப்பினும் அனைத்து இடங்களிலும் அசைவ உணவு தான் எளிதாக கிடைக்கும். நமது ஊரை தாண்டி வெளி ஊர்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்யும் போது, அங்குள்ள உணவுகளை சாப்பிட விரும்புவோம். அவற்றில் அசைவ உணவு தான் முதலிடத்தில் இருக்கும். நீங்களும் பயணம் செய்யும் போது இறைச்சி சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் இறைச்சி சாப்பிட முடியும், எந்தெந்த நகரங்களில் சாப்பிட முடியாது என்பதை அறிந்திருக்க வேண்டும். எந்த இடங்களில் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்
குஜராத்தில் உள்ள பாலிதானா நகரம்
காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிதானா என்ற நகரத்தில் பல பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. மேலும் இங்குள்ள மக்கள் சமண மதத்தை பின்பற்றுகின்றனர். இதனை தீவிரமாக பின்பற்றுபவர்கள் இந்த இடத்திற்கு வந்து செல்வது வழக்கம். இங்குள்ள மக்கள் அனைவரும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இந்த பகுதிகளில் அசைவ உணவு கிடைக்காது.
விருந்தாவன்-மதுரா, கிருஷ்ணரின் நகரம்
விருந்தாவன்-மதுரா என்பது அனைவருக்கும் பிரியமான கடவுளான கிருஷ்ணன் வாழ்ந்த ஒரு சிறப்பு வாய்ந்த இடம் ஆகும். கிருஷ்ணர் வாழ்ந்த விருந்தாவனம் மற்றும் மதுராவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சைவ உணவு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நகரங்களுக்குச் செல்லும் மக்கள் சைவ உணவுகளை மட்டுமே உண்கின்றனர்.
ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ்
ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான நகரங்கள் ஆகும். இங்கு பிரபலமான கோவில்கள் உள்ளதால், ஆன்மீக நடவடிக்கைகளுக்காகவும், கடவுளுடன் நெருக்கமாக உணரவும், உள் அமைதியைக் காணவும் மக்கள் அங்கு செல்கின்றனர். இந்த நகரங்களில் மக்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளதால், இந்த பகுதி முழுக்க எங்கும் அசைவ உணவுகள் கிடைக்காது.
வாரணாசி - சிவன் நகரம்
வாரணாசி என்பது இந்தியாவில் உள்ள பிரபலமான ஆன்மீக நகரமாகும். இந்தியாவை தாண்டி உலகெங்கிலும் உள்ள சிவன் பக்தர்கள் இந்த இடத்திற்கு அதிகம் வந்து செல்கின்றனர். அழகிய மலைகள் மற்றும் ஆறுகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு பிரபலமான இடமாகும். வாரணாசியில் உள்ள எந்த இடத்திலும் உங்களால் அசைவ உணவை பார்க்க முடியாது.
தென்னிந்தியாவில் அசைவம் கிடைக்காத இடங்கள்
தமிழ்நாட்டில் மதுரை, கும்பகோணம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் போன்ற இடங்கள் கோவில்களின் நகரமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற அதிகம் கோவில்கள் நிறைந்த இடங்களில் உங்களால் அசைவ உணவுகள் கொண்ட உணவகங்களை அதிகம் பார்க்க முடியாது.
மேலும் படிக்க | ஒன் சைட் லவ்வை டபுள் சைடாக மாற்றுவது எப்படி? ஈசியான காதல் டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ