புதுமண தம்பதிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீரின் புகைப்படத்தை பின்னுக்கு தள்ளியது புதிய மணமகளின் வைரல் புகைப்படம்..... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் திருமணம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் இவர்களின் புகைப்படத்திற்காக காத்திருந்தனர். தற்போது, ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் இருவரும் இத்தாலியில் தங்களின் திருமணம் முடித்து தற்போது மும்பையில் உள்ள ரன்வீர் வீட்டில் வசித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இவர்கள் தங்களின் திருமண புகைப்படங்களை சமூகவளைதலத்தில் வெளியிட்டு வருகின்றனர். 


இதையடுத்து முதலில் இரண்டே இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட இந்த ஜோடி நேற்று தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் திருமணக் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வந்தாலும் மணப்பெண் தீபிகா படுகோனே புகைப்படத்தை பின்னுக்கு தள்ளி மற்றொரு மணப்பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


சமீபத்தில் ஒரு புது மணமகளின் திருமணகோலத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக வளம் வருகிறது. அனால் அது கண்டிப்பாக நீங்கள் நிகைக்கும் தீபிகா படுகோனே புகைப்படம் இல்லை. அப்படி என்ன புகைப்படம் என்று நினைக்கிறீர்களா?. அது "சட்டி ஜூலியட்" (Saddi Juliet) என்ற பெயரை கொண்ட ஒரு அழகான பனி பெண் (snow woman). சட்டி என்பதன் அர்த்தம் பஞ்சாபியில் 'எமது' (our) என்பது பொருள். அதாவது, "சட்டி ஜூலியட்"  என்றால் "என்னுடைய ஜூலியட்" (Our Juliet) என்பதுதான் முழுமையான அர்த்தம். 


அந்த பனியாலான மணப்பெண் இந்திய திருமண நகைகளான காதணி, மூக்குத்தி மற்றும் நேத்திசூடி, துப்பட்ட போன்ற ஆபரணங்களை அணிந்து ஒரு அசல் மணப்பெண்ணை போன்று காட்சியளிக்கிறது. இதுகுறித்து Blog TO வலைப்பதிவின் கருத்துப்படி, ப்ளாம்ப்டன் குடியிருப்பாளர் ஜஸ்யூ கிர்ராவால் (Jassu Kingra) என்பவரால் கையால் செய்யபட்ட ஒரு பனி பொம்மை. அதற்க்கு இந்திய மணப்பெண்ணை போன்று ஆபரணங்களையும் அணிவித்துள்ளனர். அந்த மனபெண்ணின் புகைப்படத்தை ஜஸ்யூ கிர்ரா அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் அந்த புகைப்படம் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டு வைரளாகி வருகிறது.   



கடந்த சில நாட்களாக இந்த பனியால் செய்யப்பட்ட மனப்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வளம் வந்த அனைத்து புகைப்படங்களையும் உடைத்துள்ளது. இது குறித்து ஜஸ்யூ கிர்ராவால் கூறுகையில், எனது நண்பன் டால்ஜிட் இந்தியாவிலிருந்து ப்ராம்ப்டன் வந்தார். அப்போது இங்கு குளிர்காலமாக இருந்தது. அப்போது, அவர் என்னை அழைத்து ஒரு பணி மனிதனை உருவாக்குவதாக கூறினார். பின்னர், அவளை என வீட்டிருக்கு அழைத்து எவ்வாறு பனி மனிதனை உருவாக்குவது என தேர்வு செய்தோம். பின்னர், எனது நண்பனின் இரண்டு இளைய சகோதரிகள் நவி (15), பினி (9) ஆகியோர் இந்த டெசி பனி மணமகளை கட்டினார்கள். 


இந்த புகைப்படம் ட்விட்டரில் சுமார் 86,000 'லைக்'-க்கும் 21,000 ரீ-ட்விட்டும் (retweets) ஆகியுள்ளது. மேலும், எத்தனை என்று கூறமுடியவில்லை, ஒரு டன்னுக்கும் அதிகமான கருத்துக்களையும் கூறியுள்ளனர். அந்த கருத்துக்களின் சில பதிவுகளை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம் பாருங்கள்....