தாஜ் மஹாலில் நீங்கள் 3 மணிநேரத்திற்கு மேலாக செலவழிக்க வேண்டுமானால் இப்போது அதிக பணம் செலுத்த வேண்டும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் உலக அளவில் பிரபலமானது. இந்தியர மட்டும் அல்லாமல் உலக முழுவதிலும் சுற்றுளா பயணிகள் வந்து தாஜ்மகாலினை பார்வையிட்டு வருகின்றனர்.


தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மாகலினை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கான பார்வை நேரத்தினை 3 மணி நேரமகா குறைத்து சமீபத்தில் உத்திர பிரதேச அரசு உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், தாஜ் மஹாலில் நீங்கள் 3 மணிநேரத்திற்கு மேலாக செலவழிக்க வேண்டுமானால் இப்போது அதிக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஹைதராபாதில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான மொஹம்மத் முஸ்தபா ஹுசேன், ANI உடன் பேசுகையில், "ஒரு நபர் ஓய்வெடுக்கவும், சில நேரம் செலவிடவும் இங்கு வருகிறார். பார்வையிட மூன்று மணிநேரம் மட்டுமே இருக்கும் மற்றும் கட்டணங்கள் அதிகமாக இருந்தால், இங்கே வருவதற்கு முன்பு யாராவது இருமுறை யோசிக்க வேண்டும். "


மற்றொரு பார்வையாளர் சீக் நிசாம் கூறினார், "இது சுற்றுலா ஊக்கம் தரும். நேரம் ஸ்லாட் அதிகரிக்க வேண்டும்" என கூறினார். அமெரிக்காவிலிருந்து வந்த சீனி, இந்தியர்கள் ஒப்பிடுகையில், பயணிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலை கொடுத்துள்ளனர் என்றார்.


உச்ச நீதிமன்றம் தாஜ் மஹால் மோசமான பராமரிப்புக்காக உத்தரப்பிரதேச அரசாங்கத்தை குறைகூறியதுடன், நினைவுச்சின்னத்தை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.