கொரோனா சோதனை முடிவை இனி வெறும் 36 நிமிடங்களில் பெறலாம்!
சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கொரோனா பரிசோதனையின் முடிவு வெறும் 36 நிமிடங்களில் கிடைக்கும்...!
சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கொரோனா பரிசோதனையின் முடிவு வெறும் 36 நிமிடங்களில் கிடைக்கும்...!
சிங்கப்பூரில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அது என்ன என்றால், கோவிட் -19 பரிசோதனை முடிவுகளை வெறும் 36 நிமிடங்களில் வழங்கக்கூடிய கருவி. தற்போதைய சோதனை முறைக்கு அதிக பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள் மற்றும் முடிவுகளை பெற பல மணிநேரம் ஆகும்.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTC) லி காங் சீன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம், "கோவிட் -19 இன் ஆய்வக சோதனையின் நேரத்தையும், செலவையும் மேம்படுத்துவதற்கான வழிகள்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சோதனை முடிவுகள் புதிய தொழில்நுட்பத்துடன் வெறும் 36 மணி நேரத்தில் கிடைக்கும்...
இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகம், சிறிய சாதனங்களுடன் கூடிய சோதனை சமூகத்தில் இதை ஒரு 'ஸ்கிரீனிங் கருவியாக' பயன்படுத்தப்படலாம் என்றார். புதிய தொழில்நுட்பத்துடன், கோவிட் -19 ஆய்வக பரிசோதனையின் முடிவுகள் வெறும் 36 நிமிடங்களில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தற்போது, COVID-19_யை சோதிப்பதற்கான மிக முக்கியமான முறை 'பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (RT-PCR)' எனப்படும் ஒரு ஆய்வக நுட்பமாகும். இதில் இயந்திரம் மீண்டும் மீண்டும் வைரஸ் மரபணு செல்களை நகலெடுத்து ஆய்வு செய்கிறது. இது SARS-COV-2 வைரஸின் எந்த அறிகுறிகளையும் கண்டறிய முடியும்.
ALSO READ | காற்றில் COVID-19 1 மணி நேரத்திற்கும் மேலாக உயிருடன் இருக்கும்!
RNA சோதனைக்கான நேரம் அதிகம்...
RNA சோதனைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இதில் நோயாளியின் மாதிரியில் உள்ள பிற கூறுகளிலிருந்து RNA தனிமைப்படுத்தப்படுகிறது. இந்த செயல்பாட்டில் தேவையான இரசாயனங்கள் வழங்கல் உலகில் மிகக் குறைவு.
NTU LCKmedison ஆல் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் பல கட்டங்களை இணைக்கிறது. மேலும், இது நோயாளியின் மாதிரியை நேரடியாக சோதிக்கிறது. இது முடிவுகளின் நேரத்தைக் குறைக்கிறது மற்றும் RNA சுத்திகரிப்பு இரசாயனங்களின் தேவையை நீக்குகிறது. இந்த புதிய நுட்பம் குறித்த விரிவான தகவல்கள் 'ஜீன்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.