இந்தியாவில் புதிய நோட்டுகளை அச்சடித்து, அவற்றை இயக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். ஒரு ரூபாய் நாணயம் முதல் 2000 ரூபாய் வரையிலான நோட்டுகள் நாட்டில் இயங்குகின்றன. முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு, நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தது. அதற்கு பதிலாக அரசு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடித்தது, ஆனால் 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அச்சடிக்கவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் உச்சநீதிமன்றமும் பணமதிப்பு நீக்கம் சரியான முடிவு என்று தீர்ப்பு வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இரண்டு முறை பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு நோட்டு இருக்கிறது, ஆனால் அந்த நோட்டைப் பற்றி பலருக்கு தெரியாது. தற்போது நாம் பேசும் நோட்டு முதன்முதலில் 1938 இல் அச்சிடப்பட்டது, ஆனால் அதன் பயணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, சரியாக 9 ஆண்டுகளில் இந்த நோட்டு அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 


மேலும் படிக்க | Money Tips: 1994ம் ஆண்டின் அரிய ‘2’ ரூபாய் காசு லட்சங்களை அள்ளித் தரும்!


இந்த நோட்டு மீண்டும் சந்தையில் வந்ததும் இந்தியா சுதந்திர நாடாக இருந்தது. இந்த முறை இந்த நோட்டு நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த 1978 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நோட்டு நிறுத்தப்பட்டது. இந்த நோட்டு வேறேதும் இல்லை 10000 ரூபாய் நோட்டாகும்.


இந்த நிலையில் தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் ஆகும். RBI சட்டம், 1934 இன் பிரிவு 24 இன் படி, RBIக்கு 2, 5, 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000, 5000, 10000 ரூபாய் நோட்டுகளை அச்சிட உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தவறான வங்கி கணக்கு பணத்தை அனுப்பிவிட்டீர்களா? இப்படி திரும்பப் பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ