2021-ஆம் ஆண்டில் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ola...
தற்போது ஓலா எலக்ட்ரிக் பெருமளவிலான ஓட்டுநர்களைக் கொண்டு மின்சார வாகனங்களை இயக்குவதோடு, நகரங்களில் மின்சாரத்தை சார்ஜ் செய்வதற்கான தீர்வை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது ஓலா எலக்ட்ரிக் பெருமளவிலான ஓட்டுநர்களைக் கொண்டு மின்சார வாகனங்களை இயக்குவதோடு, நகரங்களில் மின்சாரத்தை சார்ஜ் செய்வதற்கான தீர்வை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
அதோடு, 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை பிரதானமாக இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. 2014 இல் உருவாக்கப்பட்ட Etergo நிறுவனம் உருவாக்கிய AppScooter, பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதாக ஓலா சுட்டிக்காட்டியிருக்கிறது. “ஆப்ஸ்கூட்டர் 240 கி.மீ தொலைவுக்கு செல்லக்கூடிய உயர் திறன் கொண்ட பேட்டரிகளைப் பயன்படுத்துகிறது.
ஆப்ஸ்கூட்டரின் சில அம்சங்களும்ம் ஓலாவின் புதிய தயாரிப்பில் பயன்படுத்தப்ப்டும் என்று தெரிகிறது. ஹீரோ எலக்ட்ரிக், பஜாஜ் ஆட்டோ போன்ற பாரம்பரிய நிறுவனங்கள், மின்சார வாகனப் பிரிவில் நுழையும் நேரத்தில் நேரத்தில் ஓலாவும் நுழைகிறது. இதைத் தவிர, Ather Energy மற்றும் Okinawa போன்ற நிறுவனங்களும் இந்தத் துறையில் புகுந்தாலும், இவற்றைப் போலல்லாமல், ஓலா தனது செயலியில் சுயமாக ஓட்டுவது மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வழங்கும் எனத் தெரிகிறது.
டெல்லியில் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பேட்டரி மாற்றும் மையங்களைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது
ஓலா மின்சார கார்களை விட மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏற்கனவே தனது மின்சார கார்கள் செயல்பாட்டில் இருக்கும்போது, மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த ஓலா ஏன் ஆர்வமாக உள்ளார் என்று கேள்வி எழலாம்.
“கார்களுடன் ஒப்பிடும்போது ஆண்டுதோறும் உலகம் முழுவதுமே இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்காக விற்பனையாகிறது. என்று ஓலா நிறுவனம் தெளிவுபடுத்துகிறது. ” எதிர்காலத்தில் நகர்ப்புறங்களில் மின்சார இரு சக்கர வாகனங்கள் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால், தான் இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பதாக ஓலா கூறுகிறது.
அதுமட்டுமல்ல, 2021-ஆம் ஆண்டில் நாட்டில் பத்து லட்சம் மின்சார வாகனங்களை வெளியிடுவதை இலக்காக கொண்டிருப்பதாக ஓலா நிறுவனம் உறுதியாகக் கூறுகிறது.
மொழியாக்கம் - நகரி அரிஅரன்