Old Pension Scheme ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: அரசு எடுக்கவுள்ள பெரிய முடிவு
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறதா? சமீபத்திய புதுப்பிப்புகள் இதோ.
பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல வித செய்திகளும் தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் இது குறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒருபுறம், பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடக்கவுள்ளது. பல மாதங்களாக ஊழியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்துமாறு கோரி வருகின்றனர். இது தொடர்பாக பல போராட்டங்களும் நடந்துவருகின்றன.
சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன. இது பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படாத மாநிலங்களின் ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஊழியர்கள் முடிவெடுக்க வேண்டும்
பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசாங்கம் சில விதிகளை வகுத்து, ஊழியர்கள் இது பற்றிய முடிவை எடுப்பதற்கான வசதியையும் அளிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருபுறம், பழைய ஓய்வூதியத் திட்டம் நீண்ட காலமாக முடக்கப்பட்ட நிலையில், இதை மீண்டும் தொடங்கலாமா என்ற கருத்தில் பல முரண்பாடுகள் வெளிவருகின்றன. இந்த முரண்பாடுகளை அகற்ற, அரசாங்கம் சில தீர்வுகளைத் தயாரித்துள்ளது. தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் தற்போது அமலில் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டுமா அல்லது புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டுமா என்பதை ஊழியர்கள் முடிவு செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம்: விவரம் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஊழியருக்கு முதுமைக்கான ஒரே ஆதரவாகக் கருதப்படுகிறது. முதியோர்களின் இந்த ஆதரவை அரசு பறிக்கக் கூடாது என்கின்றனர் ஊழியர் அமைப்புகள். இருந்தபோதிலும், அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மூடிவிட்டது. இதை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி, ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் போது, இறுதியாக வாங்கிய ஊதியத்தில் பாதி தொகை ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடர்ச்சியாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, டிஏ-வும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ