Old Pension Scheme: மீண்டும் வருகிறது பழைய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் நீண்ட காலமாக மிகப்பெரிய சர்ச்சை உள்ளது. இதற்கிடையில் இப்போது மோடி அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நீங்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆம், இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் சில ஊழியர்கள் தேர்வு செய்யலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் நீண்ட காலமாக மிகப்பெரிய சர்ச்சை உள்ளது. இதற்கிடையில் இப்போது மோடி அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் எந்த ஊழியர்களுக்கு கிடைக்கும்?
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெறப்பட்ட புதுப்பிப்பின்படி, டிசம்பர் 22, 2003 க்கு முன் பணியில் சேர்ந்த பணியாளர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். அதே சமயம், 2003 டிசம்பர் 22க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்காது. அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இனி தரமான அரிசி கிடைக்கும்
ஆகஸ்ட் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம்
அரசு ஊழியராக இருப்பவர் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். 31 ஆகஸ்ட் 2023 வரை இந்த ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு கால அவகாசம் உள்ளது. இதனுடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுத்த பிறகு மாற்ற முடியாது
அரசுத் தகவலின்படி, ஒரு பணியாளர் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், அதுவே அவரது இறுதியான முடிவாக கருதப்படும். இதன் பிறகு அந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு செல்ல முடியாது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, டிஏ-வும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதிய திட்டம்
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுப்பது, அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளன. ஜனவரி 31 நிலவரப்படி, 23,65,693 மத்திய அரசு ஊழியர்களும், 60,32,768 மாநில அரசு ஊழியர்களும் என்பிஎஸ்-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் என்பிஎஸ் செயல்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ