புதுடெல்லி: 7th Pay Commission today: மத்திய ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி. அகவிலைப்படி கணக்கீடு தொடர்பாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன (7th Pay DA Calculation). மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment) அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரத்தை மாற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படியின் (Dearness allowance) அடிப்படை ஆண்டு 2016 இல் மாற்றப்பட்டது. அமைச்சகமானது ஊதிய விகிதக் குறியீட்டின் (WRI-Wage Rate Index) புதிய தொடரை வெளியிட்டுள்ளது. 2016=100 என்ற அடிப்படை ஆண்டுடன் கூடிய புதிய WRI வரிசையானது பழைய அடிப்படை ஆண்டு 1963-65க்கு பதிலாக மாற்றப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது அகவிலைப்படியை (7th Pay Commission) கணக்கிடும் முறை மாறும்.


ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு 


அரசாங்கம் அடிப்படை ஆண்டை மாற்றுகிறது
குறிப்பிடத்தக்க வகையில், பணவீக்க தரவுகளின் அடிப்படையில், முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கான அடிப்படை ஆண்டை அரசாங்கம் அவ்வப்போது திருத்துகிறது. இது பொருளாதாரத்தில் வரும் மாற்றங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதிய முறை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO), தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை (DA Hike) ஆண்டு 1963-65 இலிருந்து 2016 வரை மாற்றப்பட்டு, நோக்கத்தை விரிவுபடுத்தவும், குறியீட்டை மேலும் திறமையாகவும் மாற்றியுள்ளது.


அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றப்படும். தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்கினால், அகவிலைப்படியின் அளவு கணக்கிடப்படுகிறது.


அகவிலைப்படி (DA) என்றால் என்ன?
அகவிலைப்படி (Dearness Allowance) என்பது அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பணம். பணவீக்கம் உயர்ந்த பிறகும், ஊழியர்களின் வாழ்க்கை நிலைமை பாதிக்கப்படாமல் இருக்க, இந்தப் பணம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணம் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR