வில்வ இலையை பறிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைவனுக்கு (God) அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம். அந்தவகையில் வில்வ இலையை (Bilvaor Vilvam leaf) பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை (Lotus) பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.


ALSO READ | யாருக்கெல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது? - இதோ உங்களுக்கான பதில்!


இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.


திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக (worship) துளசி பறிக்கலாம். மேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும்போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது.


அத்துடன் கையால் உடம்பையும், உடைகளையும் தொட்டவாறும், கொம்புள்ள கிளைகளை முறித்தலும் அப்போது செய்யக்கூடாது. நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR