மிகவும் மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை வயது மூப்பு காரணமாக சீனாவில் உயிரிழந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் ஆமைகள் தான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமை.  இந்த வகை ஆமைகள் வரைமுறையற்ற வேட்டை, நீர் மாசுபாடு போன்ற காரணங்களால் பேரழிவைச் சந்தித்தன. இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில் 2 ஆமைகள் சீனாவில் உள்ளது. இவற்றில் ஒன்று ஆண் ஆமை, மற்றொன்று பெண் ஆமை ஆகும். 


இந்த நிலையில், சீனாவின் ஷூஷோ உயிரியல் பூங்காவில் இருந்த 90 வயதான பெண் ஆமை வயது மூப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது. இந்த பெண் ஆமையும் உயிரிழந்ததால், இனப்பெருக்கம் அடைய முடியாத நிலையில் அந்த ஆமை இனம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது.