ONGCயில் 871 பணிகள் காலியாக உள்ளன! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
ONGC Recruitment 2022: இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ONGC, 871 வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
ONGC Recruitment 2022: இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ONGC, 871 வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான, ongcindia.com இல் விண்ணப்பிக்கலாம். பொறியியல் மற்றும் புவி அறிவியல் துறைகளில் 871 E1 நிலை பட்டதாரி பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
பொது/EWS/OBC பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ₹300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ST/SC அல்லது PwBD விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ONGC ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறைக்கு, விண்ணப்பதாரர்களுக்கு தேவையான கல்வித் தகுதி இருக்க வேண்டும். அவர்கள், GATE 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கூறிய தகுதிப்பட்டியலின் அடிப்படையில் அழைப்பு அனுப்பட்டு, தனிப்பட்ட நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலில் வெற்றி பெறுபவர்கள், தரவரிசை அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு
ONGC ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிப்பதற்கான படிகள்
படி 1: அதிகாரப்பூர்வ இணையதளம்---ongcindia.com ஐப் பார்வையிடவும்.
படி 2: முகப்பு பக்கத்தில் உள்ள கேரியர் என்ற தெரிவின் மீது கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | டிசிஎஸ்ஸில் வேலை வேண்டுமா? இதோ விவரமான வழிமுறைகள்
படி 3: இப்போது, GATE-2022 22 செப்டம்பர், 2022 மூலம் புவி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் (E1 நிலை) GTகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் பதிவு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 4: விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்தவும்.
படி 5: சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக நகலை பதிவிறக்கம் செய்யவும்.
இவற்றைத் தவிர மேலும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விரிவான அறிவிப்பைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க | மெடிக்கல் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ