Jawa Motorcycle இந்தியாவில் தனது விற்பனையினை நிறுத்தியது!
மறு அவதாரம் எடுத்து வந்துள்ள Jawa Motorcycle தற்காலிகமாக தனது விற்பனையினை நிறுத்தி வைத்துள்ளது!
மறு அவதாரம் எடுத்து வந்துள்ள Jawa Motorcycle தற்காலிகமாக தனது விற்பனையினை நிறுத்தி வைத்துள்ளது!
1970-களில் இருசக்கர வாகன உலகில் முடிசூடா மன்னனா இருந்த Jawa Motorcycle தற்போது மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. Royal Enfield வாகனங்களுக்கு நேரடி போட்டியாளராக களமிறங்கியுள்ள Jawa இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்த வாகனங்களுக்கான முன்பதிவு சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது Jawa வாகனங்களுக்கான முன்பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக Jawa தெரிவித்துள்ளது.
மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனத்தின் மூலம் சந்தைக்கு திரும்பிய Jawa கடந்த நவம்பர் 15-ஆம் நாள் 293-cc Jawa Forty Two, Jawa மற்றும் Jawa Perak ஆகிய மூன்று வாகனங்களை அறிமுகம் செய்தது. தற்போது Jawa வாகனங்கள் விற்பனைக்கென ப்ரத்தியேக அங்காடிகள் இல்லாத நிலையில், வாடிக்கையாளர்களிடன் முன்பதிவுகளை பெற்று, அவர்களுக்கான வாகனத்தை உரிய தேதியில் அளிப்பது என இந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. எனினும் விரைவில் Jawa வாகனங்கள் விற்பனைக்கென ப்ரத்தியேக அங்காடிகள் அமைக்கப்படும் எனவும் Jawa தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது திட்டமிடப்பட்ட வாகன உற்பத்தி எண்ணிக்கையினை விட அதிக அளவில் முன்பதிவு வந்துள்ள நிலையில் ஆன்லைன் முன்பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதா இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பெற்றுள்ள முன்பதிவிற்கான விநியோகம் வரும் மார்ச் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறலாம் என்பதால், மீண்டும் முன்பதிவிற்கான வலைதளம் அடுத்தாண்டு செப்டம்பர் மாதமே திறக்க இயலும் என தெரிவித்துள்ளது.
தற்போது முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எப்போது வாகனங்கள் டெலிவிரி செய்யப்படும் என்ற விவரம் விரைவில் தெரியபடுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.