ஜனவரி 1 முதல் ஆன்லைனில் உணவு டெலிவரி சேவைக்கு 5% GST..!!
புத்தாண்டு அதாவது ஜனவரி 1, 2022 முதல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் போது அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
புதுடெல்லி: வீட்டிலிருந்தபடியே நீங்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தால், இப்போது அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். Zomato மற்றும் Swiggy போன்ற ஆன்லைன் ஆப் அடிப்படையிலான உணவு விநியோக தளங்கள் இனி 5 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும் என்பதே இதற்கு காரணம். ஜனவரி 1, 2022 முதல் ஆன்லைன் உணவு விலைகள் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
உணவு விநியோக சேவைகளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டியை (GST) அரசாங்கம் விதித்துள்ளது. இதுவரை உணவகங்கள் இந்த வரியை செலுத்தி வந்த நிலையில், புதிய விதி அமலுக்கு வருவதால் உணவு விநியோக நிறுவனங்கள் இந்த வரியை செலுத்தும். இந்த புதிய விதி 2022 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
ALSO READ | GSTR Filing: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி, இந்த காலக்கெடுவை நீட்டித்தது அரசு
ஜிஎஸ்டியின் புதிய விதிகளுக்குப் பிறகு, உணவு வினியோகத்திற்கான செயலிகள் தாங்கள் சேவை செய்யும் உணவகங்களிலிருந்து வரி வசூலித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் பொறுப்பை பெறுகின்றன. முன்பு உணவகங்கள் ஜிஎஸ்டியை வசூலித்து வந்தாலும் அதை அரசிடம் செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்பனேடட் பழ பானங்கள் விலை அதிகரித்துள்ளது. இது 28% ஜிஎஸ்டி மற்றும் அதற்கு மேல் 12% இழப்பீடு செஸ் விதிக்கப்படும். இதற்கு முன்பு 28% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இது தவிர, ஐஸ்கிரீம் விலைகளும் அதிகரிக்கும். இதற்கு 18% வரி விதிக்கப்படும். மீட்டா பான் விலைகள் அதிகரிக்கும் இதற்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலைய்ல், அது இப்போது 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட உள்ளது.
ALSO READ | செல்போன் தொலைந்து போனால் UPI விவரங்களை பாதுகாப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR