இனி ATM-ல் பணம் எடுத்தால் அதிக கட்டணம் வசூல் செய்ய வங்கிகள் கோரிக்கை
வரவிருக்கும் நாட்களில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் அளிக்கும் நிலை வரலாம்.
புது டெல்லி: வரவிருக்கும் நாட்களில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுப்பது விலை உயர்ந்ததாக இருக்கலாம். உண்மையில், ஏடிஎம் ஆபரேட்டர்கள் சங்கம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் (Reserve Bank of India) பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிக்கச் கேட்டுள்ளது. ஏடிஎம் (ATM) இயந்திரங்களை இயக்க, அதன் நிறுவனங்களுக்கு அதிக செலவு ஆகுகிறது என்றும், வருமானம் குறைவாக வருவதால், அதனால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று அந்த அமைப்பு ஆர்பிஐ இடம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் பயனடைவதில்லை. எனவே பணத்தை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
வங்கிகளுக்கான ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் சங்கம்:
ஏடிஎம் இயந்திரங்களை நிறுவிய நிறுவனங்கள் கூறுகையில், பரிமாற்றக் கட்டணம் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்கு எதற்காக என்றால், ரிசர்வ் வங்கி கூறியுள்ள பாதுகாப்பு விதிகளின் படி, அதை பூர்த்தி செய்வதில் கணிசமாக செலவுகள் அதிகரித்துள்ளது என்றும் வாதிட்டனர். டெல்லர் இயந்திரங்களை இயக்குவதற்கான செலவும், அதன் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஏடிஎம்களுக்கான செலவினங்களுடன் ஒப்பிடும்போது வருமானத்தை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் தான் பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிப்பதை அவசியமாக்கியுள்ளது என்றுக் கூறினார்கள்.
தற்போது எவ்வளவு வசூல் செய்யப்படுகிறது:
ரிசர்வ் வங்கி (RBI) ஒரு வாடிக்கையாளருக்கு ஐந்து இலவச பரிவர்த்தனை வரம்பை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில், அதற்கு அதிகமாக பரிவர்த்தனை செய்யும் போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பரிமாற்றக் கட்டணம் ரூ .15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ATM நிறுவனங்கள் வணிகத்தை நடத்துவதற்கு இந்த தொகை போதாது என்று ஏடிஎம் ஆபரேட்டர்கள் சங்கம் கூறியுள்ளது. பிப்ரவரி 13 ம் தேதி ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தின்படி, "நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படும் இழப்புகளால் ஏடிஎம் வணிகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்காது. ஆனால் அதேநேரத்தில் இது புதிய ஏடிஎம்களை நிறுவும் வேகத்தையும் குறைத்துவிட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கோரிக்கையால் மோசமாக பாதிப்பு:
ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில், ஏடிஎம் நிறுவனங்களின் நிதி ஆரோக்கியம் மற்றும் ஏடிஎம்களின் வருமானம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ரிசர்வ் வங்கி கோரி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இது இந்தத் துறையில் பணிபுரியும் நிறுவனங்களை மோசமாக பாதிக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.