சென்னை வானொலியின் பல்வேறு அலைவரிசைகளில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க பகுதிநேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக சென்னை வானொலி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.,


வயதுவரம்பு: சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசைகளான சென்னை1, சென்னை 2 ஆகிய அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 2019 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் தேதி அன்று 20 வயது முதல் 50 வயது வரைக்குள்ளாகவும், FM RAINBOW, FM GOLD அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 20 வயது முதல் 40 வயது வரைக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.


கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலைபட்டம் பெற்றவராகவும், பள்ளிப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக படித்தவராகவும் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பதாரர்கள், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவராகஇருத்தல்வேண்டும். விண்ணப்பதாரர்கள், நல்ல குரல் வளமும், தெளிவான உச்சரிப்பும், ஒலிபரப்பில் ஆர்வமும், பொது அறிவுத்திறன் பெற்றவராகவும் இருத்தல் அவசியம்.


எழுத்துத்தேர்வு, குரல்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று அடுக்கு தேர்வுமுறையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், நிகழ்ச்சிகளின் தேவைக்கு ஏற்ப, பகுதி நேரப்பணிக்கு அவ்வப்போது, அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் இதற்க்கான விண்ணப்பத்தை www.airchennai.org என்ற இணையதள முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு 300 ரூபாய், SC/ST பிரிவினருக்கு 225/- ரூபாய்.


விண்ணப்பக் கட்டணத்தை www.airchennai.org என்ற இணையதளத்தில், online payment link-ல் click செய்து State Bank Collect என்ற பக்கத்தில் இருக்கும் Audition Fees / Programme Casual Assignee Audition என்பதை தேர்வு செய்து, அதன் மூலம் மட்டுமே பணம் செலுத்தி, அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.


“State Bank Collect” Link-ல் பணப்பரிவர்த்தனை செய்ய தேவையான வங்கி விவரங்கள்.


  • வங்கியின் பெயர் : STATE BANK OF INDIA

  • வங்கிக் கிளை : MYLAPORE

  • வங்கிக் கணக்கு எண் : 10476542131

  • வங்கியின் IFSC CODE : SBIN 0000965