கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று இந்தியர்கள் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினர். கொரோனா காலமாக இருப்பதால் வீட்டிலிருந்தே பண்டிகையை கொண்டாடியவர்கள் ஆன்லைன் டெலிவரி தளங்களில் அதிக அளவில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளனர். இதுகுறித்து Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல்(Deepinder goyal) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் Blinkit formerly Grofers என அழைக்கப்படும் ஆன்லைன் டெலிவரி தளத்தில் 33,400 ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தில் Zomato நிறுவனம் முதலீட்டு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் 5 உணவுகள்..!


மேலும் அவர் இது குறித்து கூறுகையில் ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் 80 ஆணுறைகளை ஆர்டர் செய்திருக்கிறார்.  இந்தியாவில் 1.3 லட்சம் சோடாக்கள், 43,000 குளிர்பானங்கள், 7,000 பாக்கெட்டுகள் நாச்சோஸ்(nachos), 4,884 ஜாடிகள் டிப்ஸ், 6,712 ஐஸ்கிரீம்கள் மற்றும் 28,240 இன்ஸ்டன்ட் பாப்கார்ன்களை புத்தாண்டு தினத்தன்று வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருக்கிறார்கள். 


மேலும் 11,943 ஐஸ் பேக்குகளும்(ice packs) ஆர்டர் செய்யப்பட்டன. "இத்தனை ஐஸ் பேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பது குறித்து அவர் கூறுகையில் "யாரும் காயமடையவில்லை என்று நம்புகிறேன், இது குளிர்பானங்களுக்கு பயன்படுத்துவதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.  புத்தாண்டு தினத்தன்று பெறப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கையை Blinkit கூறியுள்ளது.  மேலும் கோவிட்-19க்கான 10,000 சுய-பரிசோதனை(Coviself kit) கருவிகளையும் Blinkit வழங்கியது. இது பார்ட்டிகளில் கலந்து கொள்வோருக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அமையும்.



உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் தளங்களான Zomato மற்றும் Swiggy ஆகியவை புத்தாண்டு தினத்தன்று அதிக அளவு ஆர்டர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.  டிசம்பர் 31ம் தேதி இரவு 7.13 மணி நிலவரப்படி, Zomato நிறுவனம் நிமிடத்திற்கு 7,100 ஆர்டர்களைப் பெற்றது. அதேபோல் Swiggy நிறுவனமானது நிமிடத்திற்கு 9,000 ஆர்டர்களைப் பெற்றது.  மேலும் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, Zomato நிமிடத்திற்கு 4,000 ஆர்டர்களையும், Swiggy நிறுவனம் 5,000 ஆர்டர்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அனைவராலும் எடுக்கப்படும் டாப் 10 புத்தாண்டு தீர்மானங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR