பத்மஸ்ரீ விருது நாட்டிய திறமைக்காக கொடுக்கப்பட்டதே தவிர, அடையாளத்திற்காக கொடுக்கப்பட்டது அல்ல என பிரபல பரதநாட்டிய கலைஞரான நர்த்தகி நடராஜ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த பத்ம விருதுகள் மத்திய அரசு மொத்தம் 112 பேருக்கு அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த நர்த்தகி நடராஜூம் ஒருவர். இதன் மூலம் பத்ம விருது பெறும் முதல் திருநங்கை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 


தற்போது இவர் ANI, செய்தி நிறுவனத்துக்கு அறிவித்துள்ள பேட்டியில், இத்தகைய மதிப்புமிக்க விருதை எனக்கு அளித்த இந்திய அரசுக்கு எனது நன்றி. நான் திருநங்கை என்ற அடையாளத்திற்காக இந்த விருது எனக்கு வழங்கப்படவில்லை. பரதநாட்டிய கலைஞர் என்பதால் எனது திறமைக்காக தான் இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.


 



 


 



 


என தெரிவித்துள்ளார்.