பான் கார்டு: பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் என்பது 10 இலக்க எண்ணெழுத்து ஐடி ஆகும். இது இந்தியர்களுக்கான முக்கியமான சட்ட அடையாள அட்டையாக உள்ளது. பல விதமான பண பரிவர்த்தனைகளுக்கு பான் அட்டை அவசியமாக உள்ளது. வருமான வரித்துறைக்கு இது உங்களின் முக்கியமான ஆவணமாகும். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு பான் கார்டு மட்டும் இருப்பது மிகவும் முக்கியம். இரண்டு பான் கார்டுகளை வைத்திருக்க யாருக்கும் அனுமதி இல்லை. இரண்டு பான் கார்டுகளுடன் பிடிபட்டால், வருமான வரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்றுக்கு மேற்பட்ட PAN இருந்தால் என்ன செய்வது?


வருமான வரித் துறையின் விதிகளின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருந்தால், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


ஒருவருக்கு இரண்டு பான் கார்டுகள் எப்படி கிடைக்கும்? 


ஒருவரிடம் இரண்டு பான் கார்டுகள் இருப்பத்ற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம், அதாவது-


பல பயன்பாடுகள்:


ஒருவர் PAN -க்கு விண்ணப்பித்திருக்கலாம். அது சரியான நேரத்தில் வராமல் இருந்து அவர் மீண்டும் அதற்கு விண்ணப்பித்திருக்கலாம். இந்த வழியில் அவருக்கு இரண்டு பான் கார்டுகள் வந்துவிடுகின்றன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: தேர்தலுக்கு முன் அரசு தரவுள்ள பெரிய பரிசு... ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!!


PAN இல் பிழை இருந்தால்:


ஒருவரது பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதைத் திருத்த வேண்டும். அதற்கு பதிலாக புதிய கார்டுக்கு விண்ணபித்தால், அந்த நபரிடம் இரு பான் அட்டைகள் வந்துவிடும். 


திருமணத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய பான்:


திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் பிறகு அது அவர்களின் பான் எண்ணிலும் மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றாமல் புதிய பான் எண்ணுக்கு விண்ணப்பித்தால் அந்த பெண்ணுக்கு இரு பான் கார்டுகள் கிடைக்கலாம். 


மோசடிக்கான காரணங்கள்:


சிலர் மோசடிக்காக பல பான் கார்டுகளை ஒன்றாக வைத்துள்ளனர். இது சட்டவிரோதமானது.


பான் எண்ணை எவ்வாறு ஒப்படைப்பது?


ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் பான் கார்டை சரண்டர் செய்ய விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைனில் பான் கார்டை சரண்டர் செய்வது எப்படி?


இதற்கு முதலில் PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் மேல் நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை உள்ளிட வேண்டும். ஐடம் எண். 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களைக் கொடுக்க வேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL இணையதளத்திற்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.


ஆஃப்லைனில்  பான் கார்டை சரண்டர் செய்வது எப்படி?


இதற்கு படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய பான் கார்டின் விவரங்களை படிவத்தில் உள்ளிடவும். மேலும் இந்தப் படிவத்தை உங்கள் அருகிலுள்ள UTI அல்லது NSDL TIN வசதி மையத்தில் சமர்ப்பிக்கவும். அதன் ஒப்புகை ரசீதை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அதிகார வரம்பில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதவும். வருமான வரித் துறையின் இணையதளத்தில் உங்கள் பகுதியின் அதிகார வரம்பு அதிகாரி யார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இந்த கடிதத்தில், உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் உள்ளிட வேண்டும். சரணடைய வேண்டிய நகல் பான் கார்டின் விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும். டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் NSDL TIN இலிருந்து பெறப்பட்ட ஒப்புகை ரசீதையும் சான்றளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | PMAY: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம்... மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ