பான் கார்டு போட்டோவில் பிரச்னையா? ஈசியா ஆன்லைனில் மாற்றலாம்

Pan Card Update: பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதில் பதிவாகியுள்ள விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது எழுத்துப் பிழை, கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது உட்பட உங்கள் பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், அதை உடனே ஆன்லைனில் செய்துக்கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 16, 2023, 08:41 AM IST
  • ஆன்லைன் வழியாக பான் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்றுவது?
  • புதிய அக்கவுண்ட் தொடங்கவும் உங்களுக்கு பான் கார்டு விவரங்கள் தேவைப்படும்.
  • பான் கார்டு வைத்திருப்பவர்களின் நிதி சார்ந்த பதிவுகள் பராமரிக்கப்படுகிறது.
பான் கார்டு போட்டோவில் பிரச்னையா? ஈசியா ஆன்லைனில் மாற்றலாம் title=

வருமான வரித்துறை ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தர கணக்கு எண்ணை (பான் கார்டு) வழங்குகிறது. இது ஒரு நபரின் நிதி வரலாற்றை சேகரிக்கும் எண்ணெழுத்து குறியீடாகும் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள், சொத்து வாங்குதல் உள்ளிட்ட பல வகையான வேலைகளில் இந்த பான் கார்டு தேவைப்படுகிறது. பான் கார்டை அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தலாம். அதனால்தான் பான் கார்டில் சரியான விவரங்கள் இருப்பது மிகவும் அவசியம். அதாவது எழுத்துப் பிழை, கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது உட்பட உங்கள் பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றால், அதை உடனே செய்வது நல்லது.

கடன், கிரெடிட் கார்டு, முதலீடு போன்ற எந்தவொரு நிதிச் சேவையையும் பெறும்போது அவற்றை சரிபார்ப்புக்க இந்த பான் கார்டு கட்டாயமாகும். அதனால்தான், உங்கள் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பம் சரியாக இருக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் அவற்றை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். எனவே ஆன்லைன் மூலமாக உங்களின் பான் கார்டில் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்றி அப்டேட் செய்வது எப்படி  நாம் இப்போது தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | Post Office அட்டகாசமான திட்டம்: ஒரு முறை முதலீடு... இரு மடங்குக்கு மேல் ரிட்டர்ன்

ஆன்லைனில் பான் கார்டில் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை

* பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் புதுப்பிக்க, முதலில் NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html க்குச் செல்ல வேண்டும்.

* இப்போது அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் இருக்கும் பான் டேட்டாவில் மாற்றம் அல்லது திருத்தம் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* பின்னர் நீங்கள் 'கேட்டகிரி டைப்'-ஐ (category type) தேர்வு செய்ய வேண்டும். இங்கே Individual விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* பின்னர் கேட்கப்படும் தேவையான விவரங்களைக் கொடுக்கவும், பின்னர் கேப்ட்சா (Captcha Code) குறியீட்டை உள்ளிட்டு (Submit) சமர்ப்பிக்கவும்.

* நீங்கள் இப்போது கேஒய்சி (KYC) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* இதற்குப் பிறகு புகைப்படம் பொருந்தவில்லை மற்றும் கையொப்பம் பொருந்தவில்லை என்பதை டிக் செய்து தந்தை அல்லது தாயின் விவரங்களை உள்ளிடவும்.

* அதன் பிறகு PAN Card Signature Change அல்லது Photo Updateக்கு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

* பின்னர் உங்கள் அடையாள அட்டை, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரங்களை இணைக்கசொல்லி கேட்கப்படுவீர்கள், அதை செய்யுங்கள்.

* அதை செய்தபின்னர், டிக்ளரேஷன் செக்பாக்ஸை டிக் செய்து சமர்ப்பி (Submit) என்கிற பட்டனை அழுத்தவும்.

* மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகள் அல்லது படிகளை முடித்த பிறகு, நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய பகுதிக்கு வருவீர்கள்.

* அதன் பிறகு இந்தியாவில் உள்ள முகவரிகளின் கீழ் பான் கார்டில் உள்ள உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்ற ரூபாய் 101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும், அதுவே இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளுக்கு  ரூபாய் 1011 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.

* குறிப்பிட்ட தொகையை செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான 15 இலக்க எண்ணைப் பெறுவீர்கள்.

* தற்போது உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

* மேலும், உங்கள் விண்ணப்பம் எந்த கட்டத்தை எட்டியுள்ளது என்பதை கண்காணிக்க உங்களுக்கு கிடைத்த 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | திருமணமான பெண்களுக்கான ஜாக்பாட் திட்டம்: கணக்கில் வரும் ரூ. 5,000

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News