குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..!
Parenting Tips in Tamil: பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்ற சிம்பிள் வழிக்காட்டுதல்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புதிதாக பெற்றோர்களாகி இருப்போரும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்போரும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், “தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்” என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதனால்தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.
1,உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்:
இந்த முறை, நமக்கு முன்னாள் இருந்த பெற்றோர்கள் பயன்படுத்திய முறைதான். இதில், பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை வர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்த படி ரூல்ஸில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும் எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.
மேலும் படிக்க | ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கச்சிதமான உடலமைப்புக்கு இதுதான் காரணமா?
2.குழந்தைகளுடன் பிணைப்பு ஏற்பட்ட பெற்றோர்:
குழந்தைகளை வளர்க்கும் போது, பெற்றோர்களும் சேர்ந்தே அதனுடன் வளருகின்றனர். அப்போது குழந்தைகளுடன் அதை வளர்க்கும் பெற்றோருக்கு உணர்ச்சி பிணைப்பு உண்டாகி விடும். உதாரணத்திற்கு குழந்தை எதற்காகவாவது அழுதால், இவர்களும் அழுவார்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. குழந்தையுடன் பெற்றோருக்கு இருக்கு நெருக்கம்தான் அதிகம் ஆகும். இருப்பினும், குழந்தை வளர வளர தன்னால் ஏற்படும் பிரச்சனையை தானே சரிசெய்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் எல்லாவற்றிற்கும் பெற்றோரிடம் வந்து நிற்கும்.
3, ஹெலிகாப்டர் பெற்றோர்:
இதுதான் இருப்பதிலேயே குழந்தை வளர்ப்பில் மிகவும் டாஸிக் ஆன வழிமுறை என சொல்லப்படுகிறது. ஹெலிகாப்டரின் மேல் உள்ள ஃபேனை போல குழந்தையின் தலைக்கு மேல் இந்த வகையான பெற்றோர் சுற்றிக்கொண்டே இருப்பார்களாம். அதாவது, குழந்தையை கெட்டதில் இருந்து பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு எந்த விதமான புது அனுபவமும் ஏற்படாமல் செய்து விடுவார்கள். இவ்வாறு கை குழந்தைகளை வேண்டுமானால் பார்த்து பார்த்து வளர்க்கலாம். ஆனால், ஒரு வயதிற்கு பிறகு குழந்தைகளை அவர்கள் போக்கில்தான் வளர விட வேண்டும்.
4.வித்தியாசம் தெரியாத பெற்றோர்:
பிள்ளைகளை வளர்ப்பதில், இந்த முறையை சில பெற்றோர்கள் மட்டுமே கையாளுகின்றனர். இந்த முறையை பின்பற்றும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனக்கு சரிசமமாக நடத்துவர். பிறருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனரோ அதே அளவிற்கு தங்களது குழந்தைகளுக்கும் மரியாதை கொடுப்பர். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பர். இந்த முறையில் அவ்வளவாக குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பது போன்ற விஷயங்கள் இருக்காது. இந்த வகையான பேரண்டிங் முறையில் வளரு குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல மன நலனுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
5,அதிகாரம் செய்யும் பெற்றோர்:
முன்னர் எல்லாம், இந்த வகையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளை வளர்த்தனர். இந்த வகையான பெற்றோரை பெரும்பாலான வீடுகளில் பார்க்கலாம். இதில், குழந்தைகளை தங்கள் பேச்சினை கேட்க வைப்பது, பல விதிமுறைகளை விதித்து கட்டாயப்படுத்தி அவர்களை ஃபாலோ செய்ய வைப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபடுவர். இது குழந்தையின் எதிர்காலத்தை மட்டுமல்லாது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
மேலும் படிக்க | திருமண வாழ்வு சலிப்பு தட்டிவிட்டிவிட்டதா... சூடேத்த சூப்பர் 5 டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ