பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தோல்வியை சந்திக்கும் போது அவர்களை அரவணைத்து ஆதரவாக பேச வேண்டும். இது, அவர்களின் சுய மதிப்பை மீண்டும் அவர்களே உணர வழி வகுக்கும். குழந்தைகள் தோல்வியை சந்திக்கும் போது பெற்றோர்கள் அவர்களுடன் இருப்பது இன்றியமையாதது. தற்போதைய உலகில், பெரியவர்கள் சிறியவர்கள் அன்றி அனைவரிடத்திலும் போட்டி நிலவுகிறது. தோல்வியை பெரியவர்கள் தாங்கி கொள்வதே கடினம். இதில், குழந்தைகளின் நிலையை நினைத்து பாருங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெற்றோர்களுக்கான டிப்ஸ்:


பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தங்கள் குழந்தைக்கு துயரம் கொடுக்கும் எந்த விஷயத்தையும் எப்படியாவது அவர்களின் வாழ்க்கையில் இருந்து தூக்கி விட வேண்டும் என்று போராடுவர். ஆனால், இது குழந்தை வளர்ப்பதற்கு சரியான முறைதானா? குழந்தைகள் ஒவ்வொரு முறை தோல்வியால் துன்பம் அடையும் போதும் பெற்றோர்களால் அவர்களை தேற்ற முடியுமா? குழந்தைகள் தோல்விகளை எதிர்கொள்ள அவர்களுக்கு எப்படி மன தைரியத்தை பெற்றோர்களால் வளர்க்க முடியும். இதோ சில டிப்ஸ். 


மேலும் படிக்க | காதலிக்கு உங்கள் மீது கோபமா? ‘இந்த’ 5 விஷயங்களை செய்தால் சமாதானம்தான்!


அவர்களின் தோழி/நண்பன் போல உரையாடுங்கள்:


பிள்ளைகள் தோல்வியுற்ற பிறகு அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தோல்வியினால் ஏற்கனவே அவர்களது இதயம் படாத பாடு பட்டிருக்கும். அதனால் ஒரு பெற்றோராக பேசுவதை விட ஒரு நண்பனாக உங்கள் குழந்தையிடம் உரையாடலாம். தோல்விக்கு பிள்ளைகள்தான் காரணம் என்று பழி போடுவதை நிறுத்திவிட்டு அந்த தோல்வியில் இருந்து எப்படி மீள வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 


குழந்தைகளின் சுய மதிப்பை உறுதிப்படுத்துவது:


பெற்றோர்கள், குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக தோல்வி ஏற்படும் சமயங்களில் பெற்றோரின் அளவு கடந்த அன்பு குழந்தைகளுக்கு மருந்தாக அமையும். குழந்தைகள், தங்களுக்கு தோல்வி ஏற்படும் சமயங்களில் சுய மதிப்பை சிறிது இழப்பர். இதனால், அடுத்த முறை முயற்சி செய்யவே பயப்படுவர். எனவே, இந்த சமயங்களில் அளவு கடந்த அன்பு காட்டுவது கண்டிப்பாக அவர்களின் சுய மதிப்பிற்கு உதவி கரமாக இருக்கும். இதனால் அவர்கள் தோல்வியை கண்டு பயப்படாமல் அடுத்த முறை இன்னும் நிறைய தைரியத்துடன் முயற்சி செய்வர். 


முயற்சியால் வெற்றி என்பதை கற்றுக்கொடுங்கள்:


இந்த போட்டிகரமான உலகில் குழந்தைகளுக்கு எப்போதும் அன்புக்குரியோரின் ஊக்கம் தேவைப்படுகிறது. இது, படிப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கட்டும் அல்லது விளையாட்டு தொடர்புடைய பிற விஷயங்களாக இருக்கட்டும். வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று கூற முடியாது. அதனால், ‘முயன்ற வரை போராடு’ என்ற மந்திரத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். வெற்றி அடைவோமா தோல்வி அடைவோமா என்று பயந்து கொண்டே ஒரு போட்டியில் கலந்து கொண்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். அதனால், ‘முயற்சி  திருவினையாக்கும்’ என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு நன்கு போதித்து வையுங்கள். 


பிறருடன் ஒப்பிட வேண்டாம்:


உங்கள் குழந்தைக்கு ஒரு திறமை இருந்தால் இன்னொரு குழந்தைக்கு ஒரு திறமை இருக்கும். ஆதலால் அவர்களின் பாணியில் அவர்களை வளர விட வேண்டும். அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வளர்க்கவும் தெரியாத விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதை தவிர்த்து, அவர்களை பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்வது நல்லதல்ல. இது வளர வளர அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடும். 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே தந்த செம அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ