குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி ; இந்தியாவில் முதல் முறை - ஆணா, பெண்ணா என்று கேட்டால்...

Transman Gives Birth: இந்தியாவில் முதன்முதலாக கருவுற்றிருந்த திருநம்பி சஹத், இன்று குழந்தையை பெற்றெடுத்தார். ஆணா, பெண்ணா என கேட்பவர்களுக்கு சஹத் - ஜியா ஜோடி 'நச்' என்று பதில் ஒன்றை அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 8, 2023, 07:44 PM IST
  • திருநம்பி சஹத் மற்றும் குழந்தை நலமுடன் உள்ளனர்.
  • அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது.
  • பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி ; இந்தியாவில் முதல் முறை - ஆணா, பெண்ணா என்று கேட்டால்...

Transman Gives Birth: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், இந்தியாவிலேயே முதல் முதலாக திருநம்பி - திருநங்கை ஜோடி, குழந்தையை இன்று பெற்றெடுத்துள்ளது. இருப்பினும், அவர்கள் தங்கள் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இந்திய அளவில், திருநம்பி ஒருவர் கர்ப்பமடைந்திருப்பது சில நாள்களில் வைரல் செய்தியாக இருந்தது. திருநம்பி சஹத் - திருநங்கை ஜியா பாவல் கடந்த மூன்றாண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பேறுகால போட்டோசூட் புகைப்படங்கள்தான் டிரெண்டிங்கிற்கு காரணமாக அமைந்தது. இதில், திருநம்பி சஹத் கருவை சுமக்கும் புகைப்படம் பால் புதுமையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ziya Paval (@paval19)

மேலும் படிக்க | PM Modi Speech: தூங்குமூஞ்சி! ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்து கிண்டலடித்த பிரதமர் மோடி

இந்நிலையில், சஹத் இன்று காலை 9.30 மணியளவில் குழந்தையை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பெற்றெடுத்தார் என தெரிவிக்கப்பட்டது. குழந்தையும், குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி சஹத்தும் நலமுடன் இருப்பதாக அவரின் இணையர் ஜியா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் முதல் திருநம்பி விமானியான, ஆடம் ஹாரி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,"குட்டி குழந்தை வந்துவிட்டது. சஹத்தும் குழந்தையும் ஆரோக்கியமா இருக்காங்க. வாழ்க்கைல இவ்வளவு சந்தோஷமாக இருந்ததே இல்லை. குழந்தை ஆணா பெண்ணா என்று கேட்பவர்களுக்கு; குழந்தை வளர்ந்ததும் சொல்லப்படும்.

ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ அல்ல... எல்லாவற்றிற்கும் பிறகு நாம் யார் அவர்களின் பாலினத்தை யூகிக்க. அவர்கள் வளரட்டும் அவர்களின் அடையாளத்தை ஆராயட்டும்" என பதிவிட்டுள்ளார்.

சஹத் - ஜியா ஜோடி, ஹார்மோன் மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்த நிலையில், குழந்தை பேறுக்காக அதனை தள்ளிவைத்துள்ளனர். தற்போது, அவர்களுக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறந்திருப்பது பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

மேலும் படிக்க | பிரதமர் கொடுத்த நிதி... கணவர்களை கழட்டிவிட்டு காதலர்களுடன் ஓடிய 4 பெண்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News