Parking பிரச்சனையா? Google Maps-ன் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாமே!!
வாகனம் வாங்குவது பெரிதல்ல. வெளியே செல்லும்போது அதற்கன பார்கிங் இடத்தைக் கண்டறிவதுதான் மிகவும் கடினமான விஷயம்.
புது தில்லி: வாகனம் வாங்குவது பெரிதல்ல. வெளியே செல்லும்போது அதற்கன பார்கிங் இடத்தைக் கண்டறிவதுதான் மிகவும் கடினமான விஷயம். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
நாம் வெளியே செல்லும் போது பெரும்பாலும் நமக்கு நமது காரை நிறுத்த பார்க்கிங் கிடைப்பதில்லை. இதன் காரணமாக நாம் அதிக பிரச்சனைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பார்க்கிங் செய்வதற்கான இடத்தை நாம் கண்டறிய, கூகிள் மேப்ஸின் ஒரு அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகிள் கூகிள் மேப்ஸில் (Google Maps) காணப்படும் ஒரு அம்சத்தின் உதவியுடன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் பார்க்கிங் இடம் (Parking Space) காலியாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
பார்க்கிங் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைத் தெரிந்து கொண்டபிறகு அந்த இடத்திற்கு நாம் செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். கூகிள் மேப்ஸ் செயலியில் காணப்படும் இந்த அம்சத்தை நீங்கள் இதுவரை பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றலாம்.
இருப்பினும், அதற்கு முன்னர் சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது முக்கியம். கூகிள் மேப்ஸ் நீங்கள் ஒரு காரை எங்கு நிறுத்தலாம் என்ற துல்லியமான இடத்தைப் பற்றி சொல்லாது. ஆனால் பார்கிங் இடங்களை கண்டுபிடிக்க கடினமாக உள்ள இடங்களில் இந்த செயலி பார்கிங் செய்வதறான சில இடங்களை நமக்கு ஆலோசனையாக வழங்கும்.
முதலில், கூகிள் மேப்ஸின் சமீபத்திய பதிப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யுங்கள். இல்லையென்றால், பிளே ஸ்டோர் அல்லது App Store-க்குச் சென்று உங்கள் செயலியை புதுப்பிக்கவும். இணைய இணைப்பு தவிர, ஸ்மார்ட்போனில் இருப்பிட சேவையும் (Location Service) செயல்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு நீங்கள் சில படிகளைப் பின்பற்ற வேண்டும்,
-முதலில் கூகிள் மேப்சை திறந்து அதில் இருப்பிடத்தை (Location) உள்ளிடவும்.
- இப்போது கீழே தோன்றும் ‘Direction’ பட்டனை அழுத்தவும்.
- பின்னர் கீழே உள்ள ‘Start’ பாட்டம் பாரை ஸ்லைடு செய்யவும்.
- இதற்குப் பிறகு, வாகன நிறுத்துமிடத்தின் 'P' சின்னத்தை நீங்கள் காண்பீர்கள். இது, உங்கள் இலக்கைச் சுற்றியுள்ள பார்க்கிங் இடங்கள் பற்றியும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்குமா இல்லையா என்பது பற்றியும் தெரிவிக்கும்.
எந்த இடத்தையும் சர்ச் செய்த பிறகு தோன்றும் 'P' ஐகான், அந்தப் பகுதியில் பார்க்கிங் கிடைக்குமா கிடைக்காதா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். பார்க்கிங் இடம் காலியாக இருக்கும்போது கூட, இந்த சின்னத்தைத் தட்டி (Tap செய்து) நீங்கள் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: Quick Charge 5 உதவியால் இனி மொபைலை 15 நிமிடத்தில் சார்ஜ் செயலாம்!!