இன்று பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது இந்தியாவில் பார்க்க முடியும். கிரகண காலத்தில் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு பூரண சந்திரகிரகணம் தொடங்குகிறது. அது 1:31 மணிக்கு உச்சம் அடைந்து அதிகாலை 4:30 மணிக்கு முடிகிறது. அதாவது மொத்த 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகணம் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சந்திரகிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது, சந்திரனை பார்க்கக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த சந்திரகிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பண்ணக்கூடாதது எவை!


சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.


கிரகணம் முடியும்வரை உணவு சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல், வீட்டில் சமையல் செய்யாமலும் இருக்க வேண்டும்.


கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் நகம் வெட்டக்கூடாது, காய்கறி நறுக்ககூடாது மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.