ரயிலில் டிக்கெட் செக் செய்யக்கூடாது! இந்த விசேஷ விதிமுறை உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் ரயிலில் பயணிக்கும்போது இரவு 10 மணிக்கு பிறகு ரயிலில் TTE உங்களிடம் டிக்கெட் கேட்க முடியாது, இந்த முக்கியமான விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
Train Ticket Rules: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், முக்கியமான விதிமுறையை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடத்தில் TTE இரவு 10 மணிக்குப் பிறகு ரயில் டிக்கெட்டை செக் செய்ய முடியாது. ஒருவேளை டிடிஇ தொந்தரவு செய்தால், நீங்கள் டிக்கெட் காண்பிக்க மறுக்கலாம்.
டிக்கெட்டுகளை சரிபார்ப்பதற்கான விதிகள்
* நீங்கள் ரயிலில் பயணம் செய்து இரவு 10 மணிக்கு மேல் இருந்தால், TTE உங்களை காலை வரை தொந்தரவு செய்ய முடியாது. இரவு 10 மணிக்கு மேல் உங்கள் ரயில் டிக்கெட்டை சரிபார்க்க TTE யாராவது வந்தால், நீங்கள் அதை மறுக்கலாம்.
மேலும் படிக்க | இனி இதற்கெல்லாம் பான் அட்டை தேவையில்லை... பட்ஜெட்டில் வருகிறது அப்டேட்!
இரவில் பெட்டியில் விளக்குகளை எரிக்கலாமா?
* ரயிலில் பயணம் செய்வது தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் என்பதால், இரவு நேரங்களில், ரயில் பெட்டியில் இரவு விளக்கை தவிர மற்ற அனைத்தையும் மூடி வைக்க வேண்டியுள்ளது.
இரவில் எத்தனை மணி வரை பேசலாம்?
* நீங்கள் உங்கள் குழுவுடன் ரயிலில் பயணம் செய்தால் இரவு 10 மணிக்கு மேல் உங்களால் ஒருவருக்கொருவர் பேச முடியாது. ஏனென்றால், உங்கள் உரையாடலின் சத்தம் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும்.
பெர்த் விதி என்ன?
* ரயிலில் உங்கள் பெர்த் கீழே இருந்தால், சக பயணி தூங்குவதற்கு நடுத்தர பெர்த்தை திறக்க விரும்பினால், நீங்கள் அவரை மறுக்க முடியாது.
மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ