வெளிநாடுகளுக்கு செல்ல முக்கியமான ஆவணமாக உள்ள பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பிக்கும் செயல்முறை தற்போது எளிமையான ஒன்றாக மாறிவிட்டது.  விண்ணப்பித்த வெறும் ஏழு நாட்களில் பாஸ்போர்ட் உங்கள் இல்லம் தேடி வரும் வகையில் பாஸ்போர்ட் விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.  ஆன்லைன் பாஸ்போர்ட்டைப் பெற, நீங்கள் https://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்கிற இணையதள முகவரிக்கு முதலில் செல்ல வேண்டும்.  இந்த தளத்தில் உங்களுக்கு பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும், ஏழு நாட்களில் பாஸ்போர்ட்டை பெற விரும்பினால் நீங்கள் இங்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!


ஆன்லைனில் சீக்கிரமாக பாஸ்போர்ட்டை விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் உதவிகரமானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும்.  இந்த பாஸ்போர்ட்டில் அப்படி சிறப்பு இருக்கிறது என்றால் மிக விரைவாகவே இதில் உங்களது பாஸ்போர்ட் தயாராகி விடுகிறது மற்றும் உங்களுக்கு அலைச்சலும் மிச்சமாகிறது.  இப்போது பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதால் ஆன்லைனில் பாஸ்போர்ட் தொடர்பான அணுகலுக்கு நீங்கள் அப்பாயின்ட்மென்ட் எடுக்க வேண்டும், அப்பாயின்மென்ட் பெற்ற பிறகு உங்கள் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.


பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும், முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்கும் முன்னர் இணையதளத்தை கவனிக்க வேண்டும், இணைய பக்கத்தை முறையாக சரிபார்த்த பின்னர் நீங்கள் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  உங்களின் ஃபைல் ஏற்கப்பட்டதும் உங்கள் வீட்டில் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வெரிஃபிகேஷன் நடைபெறும்.  அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் பாஸ்போர்ட் சரியாக ஏழு நாட்களுக்குள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.


மேலும் படிக்க | அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்! முழு விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ