உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!

இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி, அக்டோபர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உட்பட கிட்டத்தட்ட 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 24, 2022, 01:45 PM IST
  • அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
  • அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21 நாட்கள் வங்கி விடுமுறைகள் உள்ளன.
  • உள்ளூர் விடுமுறைகளை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யும்.
உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை! title=

வங்கிகள் எந்தெந்த நாட்களில் செயல்படும், எந்தெந்த அந்நாட்களில் செயல்படாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது பலருக்கும் பல வகைகளில் உதவுகிறது.  மக்கள் தங்களது பரபரப்பான வேலை நாட்களில் வங்கி வேலையை முடிக்க செல்லும்போது அன்றைய தினம் வங்கிக்கு விடுமுறை தினமாக இருந்தால் அவர்களின் நேரம் வீணாகிவிடுகிறது, அதனால் விடுமுறை நாள் வேலை நாட்களை தெரிந்துகொள்வது நல்லது.  அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வரிசைகட்டி நிற்கின்றன, அதனால் வருகின்ற அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21 நாட்கள் வங்கி விடுமுறைகள் உள்ளன, இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  சில மாநிலங்களில் விடப்படும் உள்ளூர் விடுமுறைகளை தவிர்த்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த பொது விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும், உள்ளூர் விடுமுறைகளை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு

அக்டோபர் மாதத்தில் 21 வங்கி விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது, இந்த மாதத்தில் முதல் விடுமுறை அக்டோபர் 2 ஆம் தேதியான காந்தி ஜெயந்தியிலிருந்து தொடங்குகிறது.  துர்கா பூஜை மற்றும் தசரா அல்லது விஜயதசமி போன்ற பண்டிகை இருப்பதால் அக்டோபர் 5ம் தேதியன்று விடுமுறை வழங்கப்படுகிறது,  வங்கிகள் தான் மூடப்பட்டிருக்குமே தவிர ஆன்லைன் வழி சேவைகளில் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.  இப்போது இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதை பின்வருமாறு காண்போம்.

அக்டோபர் 1 - வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு
அக்டோபர் 2 - ஞாயிறு & காந்தி ஜெயந்தி விடுமுறை
அக்டோபர் 3 - துர்கா பூஜை (மகா அஷ்டமி)
அக்டோபர் 4 - துர்கா பூஜை/தசரா (மகா நவமி)/ஆயுத பூஜை/ஸ்ரீமந்த சங்கரதேவரின் ஜன்மோத்சவ்
அக்டோபர் 5 - துர்கா பூஜை / தசரா (விஜய தஷ்மி) / ஸ்ரீமந்த சங்கரதேவரின் ஜன்மோத்சவ்
அக்டோபர் 6 - துர்கா பூஜை (தாஷைன்)
அக்டோபர் 7 - துர்கா பூஜை (தாஷைன்)
அக்டோபர் 8 - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாது-உல்-நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்)
அக்டோபர் 9 - ஞாயிறு
அக்டோபர் 13 - கர்வா சௌத்
அக்டோபர் 14 - ஈத்-இ-மிலாத்-உல்-நபிக்கு அடுத்த வெள்ளிக்கிழமை
அக்டோபர் 16 - ஞாயிறு
அக்டோபர் 18 - Kati Bihu
அக்டோபர் 22 - நான்காவது சனிக்கிழமை
அக்டோபர் 23 - ஞாயிறு
அக்டோபர் 24 - காளி பூஜை/தீபாவளி/தீபாவளி (லக்ஷ்மி பூஜை)/நரக சதுர்தசி)
அக்டோபர் 25 - லக்ஷ்மி பூஜை/தீபாவளி/கோவர்தன் பூஜை
அக்டோபர் 26 - கோவர்தன் பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/பாய் பிஜ்/பாய் துஜ்/தீபாவளி (பலி பிரதிபதா)/லக்ஷ்மி பூஜை/சேர்ப்பு நாள்
அக்டோபர் 27 - பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை/தீபாவளி/நிங்கோல் சக்கௌபா
அக்டோபர் 30 - ஞாயிறு
அக்டோபர் 31 - சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்/சூர்ய பஷ்டி தலா சாத் (காலை அர்த்யா)/சத் பூஜை

மேலும் படிக்க | குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மாதம் ரூ.2500 வருமானம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News